Click here to view instructions pdf 10ம் வகுப்பு பொது தேர்வுக்கான செய்முறை தேர்வுகளை பிப்ரவரி 21 முதல் 28ம் தேதிக்குள் நடத்தி முடிக்க அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பத்தாம் வகுப்பில் அறிவியல் பாடத்துக்கு மட்டும் செய்முறை தேர்வுகள் நடத்தப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு புதிய பாடத்திட்டத்தின் கீழ் மார்ச் 27ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் பள்ளி சார்ந்த மாணவர்களுக்கு பிப்ரவரி 21 முதல் 28ம் தேதி வரையிலும், தனி தேர்வர்களுக்கு பிப்ரவரி 26 முதல் 28ம் தேதி வரையிலும், ஏதேனும் ஒரு நாளில் செய்முறை பொதுத்தேர்வுகளை நடத்த வேண்டும் என அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. செய்முறை தேர்வுக்கு தேவையான காலி மதிப்பெண் பட்டியல் அடங்கிய கட்டுகள், வருகைப்பதிவேடு தாள் போன்றவற்றை www.dge.tn.gov.in இணையதளத்தில் இருந்து அனைத்து பள்ளிகளும் தரவிறக்கம் செய்து, அதில் மாணவர்களின் விவரங்களைப் பூர்த்தி செய்து, கையெழுத்து பெற்ற பின்னர் செய்முறைத் தேர்வுக்கு மாணவர்களை அனுமதிக்க வேண்டும் என்று தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து மதிப்பெண் பட்டியலை மார்ச் 3ம் தேதிக்குள் மாவட்ட கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
Click here to view instructions pdf தனித்தேர்வர்கள் தாங்கள் பயின்ற பள்ளியில் பிப்ரவரி 26 முதல் 28 வரை ஏதேனும் ஒரு நாளில் தேர்வு எழுத வேண்டும் என்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும், எந்த புகாருக்கும் இடம் அளிக்காமல் உரிய முறையில் செய்முறை தேர்வினை நடத்தி முடிக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 10-ம் வகுப்பு அறிவியல் செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 21-ம் தேதி தொடங்குகிறது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. பிப்ரவரி 21ம் தேதி முதல் 28-ம் தேதி வரை செய்முறைத் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த புகாருக்கும் இடம் அளிக்காமல் உரிய முறையில் நடத்தி முடிக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2020 - பள்ளி மாணாக்கர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் ( சிறப்பு அனுமதி திட்டத்தில் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் உட்பட ) அறிவியல் பாட செய்முறைத் தேர்வு நடத்துதல் , மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் ( Download ) செய்தல் மற்றும் சில அறிவுரைகள் வழங்குதல் – சார்ந்து .
Click here to view instructions pdf
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.