ஏர்டெல் நிறுவனம்
மேலும் பார்தி ஏர்டெல் நிறுவனம் ஒரு புதிய மற்றும் மலிவான ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இதன் டேட்டா, வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளுடன் சேர்த்து ரூ.2லட்சம் மதிப்பிலான ஆயுள் காப்பீட்டு தொகையும் கிடைக்கும் என்பது கூடுதல் சுவாரசியம்.
ஏர்டெல் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு ரூ.179-மதிப்புள்ள புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய திட்டம் மற்ற திட்டங்களை விட மாறுபட்டது என்றுதான் கூறவேண்டும், எனெனில் இந்த ரூ.179-மதிப்புள்ள புதிய ப்ரீபெய்ட் திட்டம் ரூ.2 லட்சம் ஆயுள் காப்பீட்டுத் தொகையுடன் தொகுக்கபப்பட்டுள்ளது
22தொலைத் தொடர்பு வட்டங்களிலும்
அதன்படி ஏர்டெல் நிறுவனத்தின் இந்த ரூ.179-ப்ரீப்பெய்ட் திட்டம் ஆனது 22தொலைத் தொடர்பு வட்டங்களிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் சில ஏர்டெல் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்க கூடிய ஒரு திட்டம் அல்ல என்று அர்த்தம்.
குறிப்பாக ஏர்டெல் இந்த திட்டத்தை பாரதி ஆக்ஸா லைஃப் இன்சூரன்ஸ் உடன் இணைந்து கொண்டு வருகிறது, தெரியாதவர்களுக்கு ஏர்டெல் நிறுவனம் முன்பு பாரதி ஆக்ஸா லைஃப் இன்சூரன்ஸ் உடன் இணைந்து அதன் ப்ரீபெய்ட் பயனர்களுக்காக சில திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதேபோன்ற சலுகைகளுடன் கூடிய சமீபத்திய திட்டத்தின் விலைதான் ரூ.179-திட்டம் ஆகும்.
வரம்பற்ற அழைப்பு நன்மைகள்
ஏர்டெல் நிறுவனத்தின் புதிய ரூ.179-ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகளை பொறுத்தவரை, வரம்பற்ற அழைப்பு நன்மைகள்,2ஜிபி அளவிலான டேட்டா, 300எஸ்எம்எஸ்கள் மற்றும் பாரதி ஆக்சாவிலிருந்து ரூ.2லட்சம் டேர்ம் லைஃப் கவர் போன்றவைகள் அணுக கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28நாட்கள் ஆகும். சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், நன்மைகள் அவ்வளவு சிறப்பானதாக இல்லை, ஆனால் ஆயுள் காப்பீட்டு நன்மை இருப்பதால் கண்டிப்பாக அதிக பயனர்கள் இதைப் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது
ஏர்டெல் நிறுவனம் ரூ.179-திட்டத்தின் வழியே அறிவித்துள்ள இந்த காப்பீட்டுத் தொகை ஆனது 18வயது முதல் 54 வயதுடைய அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும். பின்பு ஏர்டெல் வழங்கும் லைஃப் இன்சூரன்ஸிற்கு எந்த விதமான பேப்பர் வொர்க்கோ அல்லது மருத்துவ பரிசோதனையோ தேவையில்லை. அந்நிறுவனம் அறிவித்த தகவலின் அடிப்படையில் பயணர்களுக்கான பாலிசி சான்றிதழ் உடனடியாக டிஜிட்டல் முறையில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காப்பீட்டு சான்றிதழ் நகல் தேவைப்பட்டால் கூட நீங்கள் வெறுமனே அதற்கான கோரிக்கையை விடுத்தால் போது என ஏர்டெல் நிறுவனம் கூறியுள்ளது.
ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ள இந்த லைஃப் இன்சூரன்ஸ் செயல்முறையும், எந்தவொரு ஏர்டெல் சில்லறை விற்பனையகத்திலோ அல்லது ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் வழியாகவோ சில நிமிடங்களில் டிஜிட்டல் முறையில் நிகழ்த்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.