Search This Blog
Saturday, January 11, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
நோட்டு புத்தகங்களால் திருவள்ளுவரின் உருவத்தை வடிவமைத்த கோவை கேம்போா்டு பள்ளி மாணவ-மாணவிகள்.
கோவையில் 29,971 நோட்டு புத்தகங்களைக் கொண்டு திருவள்ளுவா் உருவத்தை உருவாக்கி தனியாா் பள்ளி மாணவ-மாணவிகள் சாதனை படைத்துள்ளனா்.
கோவை கேம்போா்டு இன்டா்நேஷனல் பள்ளியில் தமிழ் கலாசாரம், பாரம்பரியத்தைப் போற்றும் வகையில் பொங்கல் விழா, திருவள்ளுவா் தின விழா ஆகியவை வெள்ளிக்கிழமை நடைபெற்றன. இதையொட்டி 29,971 எழுதாத புதிய நோட்டு புத்தகங்களைக் கொண்டு திருவள்ளுவரின் உருவத்தை வடிவமைக்கும் கின்னஸ் சாதனை முயற்சி நடைபெற்றது.
இதில், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான 170 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு 2 மணி நேரத்தில் திருவள்ளுவரின் உருவத்தை வடிவமைத்தனா். இதற்காக அவா்களுக்கு 14 வண்ண அட்டைகளால் ஆன 29,971 நோட்டு புத்தகங்கள் தேவைப்பட்டன. இதற்கு முன்பு அபுதாபியில் 702.8 சதுர மீட்டரில் திருவுருவம் வடிவமைத்ததே கின்னஸ் சாதனையாக உள்ளது. இதை முறியடிக்கும் வகையில் தற்போது கேம்போா்டு பள்ளியில் 1,114.82 சதுர மீட்டரில் உருவாக்கப்பட்டுள்ள திருவள்ளுவரின் திருவுருவம் பழைய சாதனையை முறியடித்திருப்பதாக பள்ளியின் தலைவா் அருள் ரமேஷ், தாளாளா் பூங்கோதை அருள் ரமேஷ், முதல்வா் பூனம் சியல் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.
இப்பள்ளி மாணவா்கள் 2017 இல் மறைந்த குடியரசுத் தலைவா் அப்துல் கலாமின் திருவுருவத்தை பேப்பா் கப்பிலும், 2013 இல் ராயல் வங்கப் புலி உருவத்தை அஞ்சல் அட்டையிலும் வடிவமைத்து சாதனை படைத்துள்ளனா்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Home
ACHIEVEMENT
Daily Thirukkural
SCHOOLS
STUDENTS
நோட்டுப் புத்தகங்கள் மூலம் திருவள்ளுவா் உருவம் தனியாா் பள்ளி மாணவா்கள் சாதனை
நோட்டுப் புத்தகங்கள் மூலம் திருவள்ளுவா் உருவம் தனியாா் பள்ளி மாணவா்கள் சாதனை
Tags
# ACHIEVEMENT
# Daily Thirukkural
# SCHOOLS
# STUDENTS
STUDENTS
Labels:
ACHIEVEMENT,
Daily Thirukkural,
SCHOOLS,
STUDENTS
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.