👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
சர்வதேச யோகா போட்டியில், சாதிக்க துடிக்கும் பள்ளி மாணவி, ராணுவத்தில் பணிபுரிவதை லட்சியமாக வைத்துள்ளார்.
சேலம் மாவட்டம், மேட்டூரைச் சேர்ந்த குமார் - ஸ்ரீதேவியின் மகள் அபர்ணா, 16; சர்வதேச யோகா போட்டிகளில், பரிசுகள் பெற்று, சாதனை படைத்துள்ளார்.அபர்ணா கூறியதாவது:தந்தை கிரேன் ஆப்பரேட்டர். நான், மூன்றாம் வகுப்பு வரை, ராமன் நகர் மால்கோ பள்ளியில் படித்தேன். பின், தந்தை பெங்களூரில் வேலைக்கு சென்றதால், குடும்பத்துடன் அங்கு சென்று வசிக்கிறோம். அங்குள்ள, நித்தி சர்வதேச பள்ளியில், பிளஸ் 1 படிக்கிறேன். முதலில் மேடைகளில் நடனமாடிய நான், பின் யோகா கற்க துவங்கினேன்.
இதில், மாவட்ட, மாநில அளவில் பரிசுகள் பெற்றேன். கடந்த அக்டோபரில், மலேஷியாவில் நடந்த சர்வதேச யோகா போட்டியில், 16 முதல், 20 வயது பிரிவில், வெண்கலம் வென்றேன். ஜன., 4 - 7 வரை, புதுச்சேரியில் நடந்த சர்வதேச யோகா திருவிழாவில், நான்காமிடம் பிடித்தேன்.வரும் மே மாதம், கனடாவில் நடக்கும் சர்வதேச போட்டியில் தங்கம் வெல்ல, கடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளேன். ராணுவத்தில் பணிபுரிவதை, லட்சியமாக வைத்துள்ளேன். பொறியியல் படிப்பு முடிந்ததும், ராணுவத்தில் சேர முடிவு செய்துள்ளேன். இவ்வாறு, அவர் கூறினார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.