👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் துறைகளில், 16 வகையான செயல் திறன்கள் அடிப்படையில், மாற்றுத் திறனாளிகளுக்கான பணியிடங்கள் வரையறை செய்யப்பட்டுள்ளன.
அரசு பணிகளில், மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய வாய்ப்புகளை உறுதி செய்ய, மத்திய - மாநில அரசுகள், நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. புதிய பணியிடங்களை உருவாக்குவது, பணியாளர் தேர்வு ஆகியவற்றில், மாற்றுத் திறனாளிகளுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.இந்நிலையில், மத்திய அரசின் கீழ் வரும் துறைகள், பொதுத் துறை நிறுவனங்கள், ஆணையங்களில், மாற்றுத் திறனாளிகளுக்கான பணியிடங்களை கண்டறிந்து, வரையறுக்க வேண்டும் என, மத்திய அதிகார பகிர்வு மற்றும் சமூக நீதி அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கு எந்தெந்த பணியிடங்கள் ஏற்றதாக இருக்கும் என்பதில், பழைய வழிமுறைகளே கடைப்பிடிக்கப்படுகின்றன. இதற்கு மாற்றாக, அரசு பணியிடங்களை, செயல் திறன் அடிப்படையில் வகைப்படுத்தி, அதில், எந்தெந்த பணியிடங்கள், எத்தகைய மாற்றுத் திறனாளிகளுக்கு பொருத்தமாக இருக்கும் என்பதை வரையறுக்க பரிந்துரை செய்யப்பட்டது. இதன் அடிப்படையில், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறையில், மாற்றுத் திறனாளிகளுக்கான பணியிடங்களை வரையறுக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டன.
இதில், பார்த்தல், கேட்டல், கவனித்தல், படித்தல், எழுதுதல், நடப்பது என, 16 வகையான செயல் திறன்கள் பட்டியலிடப் பட்டுள்ளன.இந்த செயல் திறன்கள் அடிப்படையில், பணியிடங்கள் வகைப்படுத்தப்பட்டு, மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்படும். இதற்கான பணிகளை வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை இறுதி செய்துள்ளது.இந்த அணுகுமுறையை அனைத்து துறைகளும் கடைப்பிடிக்க, மத்திய அரசு அறிவுறுத்தல்களை அனுப்பி வருகிறது. விரைவில், தமிழக அரசு பணியிடங்களும், செயல் திறன் அடிப்படையில் வகைப் படுத்தப்பட உள்ளன.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.