👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
மதுரை அரசு மருத்துவக் கல்லுாரியில் முதல் முறையாக கவுரவ பேராசிரியர்களை நியமிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக விவரங்கள் கோரி துறை தலைவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப் பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரிகளுக்கு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் பேராசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். பேராசிரியர்கள் பற்றாக்குறை இருப்பின் கவுரவ பேராசிரியர்களை நியமிக்க சமீபத்தில் வழிவகைகள் செய்யப்பட்டன. இவர்களை தேர்வு செய்ய மூவர் குழு அமைக்கப்பட்டது. இதற்கு டாக்டர்கள் சங்கங்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது.
மருத்துவப் பணியாளர்கள் தேர்வாணையம் இருக்கும்போது, மூவர் குழு மூலம் கவுரவ பேராசிரியர்களை தேர்வு செய்வது முறைகேடுகளுக்கு வழி வகுக்கும் என குற்றச்சாட்டுகள் எழுந்தன.இந்நிலையில் மதுரை அரசு மருத்துவக்கல்லுாரியில் முதல் முறையாக கவுரவ பேராசிரியர்களை நியமிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக அனைத்து துறை தலைவர்களுக்கும் நிர்வாகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், 'தங்கள் துறைக்கு கவுரவ பேராசிரியர்கள் வேண்டுமா என்பதையும், தேவையென்றால் அதன் விவரங்களையும் உடனடியாக தெரிவிக்க வேண்டும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.