11,12th Internal Mark Online Uploading Time Table, HM Certificate And Uploading Instructions DGE Published! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, January 11, 2020

Comments:0

11,12th Internal Mark Online Uploading Time Table, HM Certificate And Uploading Instructions DGE Published!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
DGE Internal Mark Full Instructions ( pdf ) 2019 - 2020 கல்வியாண்டில் மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு பள்ளியில் வழங்கப்பட்ட அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யவேண்டும் . 1 . அகமதிப்பீட்டிற்கான பாடக் குறியீடுகள் மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களது அகமதிப்பீட்டு மதிப்பெண்களை பதிவு செய்வதற்கு ஏதுவாக , ஒவ்வொரு பாடத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பாடக் குறியீடுகள் ( + 1 and + 2 Subject codes for Internal marks ) விவரம் இத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது .
2 வருகைப் பதிவிற்கான மதிப்பெண்களை கணக்கிடுதல் 2019 - 2020 கல்வியாண்டின் ஆரம்ப நாள் முதல் 31 . 01 . 2020 வரை மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரிந்த நாட்களைக் கணக்கிட்டு , அதன் அடிப்படையில் வருகைப் பதிவிற்கான மதிப்பெண்களை பார்வை 3 - ல் காணும் செயல்முறைகளில் வழங்கப்பட்ட அறிவுரைகளைப் பின்பற்றி கணக்கிட வேண்டும் . DGE Internal Mark Full Instructions ( pdf )
3 . அகமதிப்பீட்டு மதிப்பெண்கள் வழங்குதல் தொடர்பான கூடுதல் அறிவுரைகள் ( i ) பள்ளி மாணவர்களில் , நீண்ட நாட்கள் பள்ளிக்கு வருகை புரியாமல் இருத்தல் உள்ளிட்ட காரணங்களால் ஏதேனும் ஒரு மாணவருக்கு வருகைப்பதிவு / உள்நிலைத்தேர்வு / ஒப்படைவு ஆகியவற்றிற்கு மதிப்பெண்கள் ஏதும் வழங்கப்படாமலிருந்தால் , 0 மதிப்பெண் வழங்கப்பட்டதாக பதிவு செய்ய வேண்டும் . ( ii ) மொழிப்பாட விலக்கு ( Language Exemption ) பெற்ற மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு , விலக்கு பெற்ற மொழிப்பாடத்திற்கு அகமதிப்பீட்டு மதிப்பெண் 0 என பதிவு செய்ய வேண்டும் . 4 . வெற்று மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்தல் பள்ளித் தலைமையாசிரியர்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பிற்சேர்க்கையில் குறிப்பிட்டுள்ள நாட்களில் அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்திற்குச் ( www . dge . tn . gov . in ) சென்று தங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள USER ID மற்றும் Password - ஐ பயன்படுத்தி , மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான பெயர்பட்டியலில் இடம் பெற்றுள்ள தங்களது பள்ளி மாணவர்களது அகமதிப்பீட்டு மதிப்பெண்களை பதிவு செய்வதற்கான வெற்று மதிப்பெண் பட்டியல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும் . DGE Internal Mark Full Instructions ( pdf )
5. வெற்று மதிப்பெண் பட்டியலை பூர்த்தி செய்து , அக மதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்தல் பார்வை 3 - ல் காணும் செயல்முறைகளில் குறிப்பிட்டவாறு மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகளுக்கு தயாரிக்கப்பட்டுள்ள அகமதிப்பீடு மதிப்பெண்களுக்கான ஒருங்கிணைக்கப்பட்ட படிவத்தில் உள்ளவாறு , ஒவ்வொரு பாடத்திற்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்களை , மேற்குறிப்பிட்டவாறு பதிவிறக்கம் செய்த மதிப்பெண் பட்டியலில் பதியவேண்டும் . அதன் பின்னர் , அம்மதிப்பெண்களை தலைமையாசிரியர் தங்களுக்கு வழங்கப்பட்ட USER ID மற்றும் Password - ஐ பயன்படுத்தி , பிற்சேர்க்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளில் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும் . 6. பெயர்பட்டியலில் இடம் பெற்றுள்ள தங்கள் பள்ளி மாணவர்கள் அனைவரது அக மதிப்பீட்டு மதிப்பெண்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை பள்ளி தலைமையாசிரியர் உறுதி செய்து கொள்ள வேண்டும் . எந்த ஒரு மாணவரது மதிப்பெண்களும் பதிவேற்றம் செய்யப்படாமல் இருத்தல் கூடாது . Download - DGE Internal Mark Full Instructions ( pdf )
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews