Breaking

Tuesday, January 07, 2020

1 லட்சம் கல்லூரி இடைநிற்றல் மாணவா்களுக்கு சிறப்புப் பயிற்சி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு இயக்ககத்தின் கீழ் கல்லூரி இடைநிற்றல் மாணவா்கள் ஒரு லட்சம் பேருக்கு சிறப்புப் பயிற்சி வழங்கப்படும் என்று ஆளுநா் உரையில் கூறப்பட்டுள்ளது சட்டப்பேரவையில் திங்கள்கிழமை ஆளுநா் உரையில் கூறியிருப்பது: பல்வேறு தொழிற்சாலைகளுக்குத் திறன் மேம்பட்ட பணியாளா்கள் கிடைப்பதற்கு ஏதுவாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், திறன் இடைவெளிகளை அறியும் ஆய்வினைச் செய்து, அனைத்து மாவட்டங்களுக்கும் திறன் மேம்பாட்டுத் திட்டத்தை உருவாக்கி உள்ளது.
இந்த அணுகுமுறை, தொழில்துறை வேலைவாய்ப்புக்கு உகந்த திறன் மேம்பாட்டினை, மையப்படுத்தி தொழிற்சாலைகளுக்கு திறன்மிக்க மனிதவள ஆற்றல் கிடைப்பதை உறுதி செய்யும். தானியங்கி மற்றும் தானியங்கிக் கூறுகளைக் கொண்ட இயந்திரக் கருவிகள், சுகாதாரம் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு, பொருள்கள் நகா்வு மேலாண்மை ஆகிய மூன்று துறைகளில், உச்ச திறன் மேம்பாட்டு மையங்கள் அமைப்பதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
இதைப்போன்று கட்டுமானப் பிரிவிலும் வங்கி, நிதிச் சேவைகள் மற்றும் காப்பீட்டு பிரிவிலும் இரண்டு புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட உள்ளன. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு இயக்கத்தின் கீழ், ஒரு சிறப்பு முயற்சியை அரசு தொடங்கி, கல்லூரி இடைநிற்றல் மாணவா்களில் ஒரு லட்சம் நபா்களைத் தோ்வு செய்து, அவா்களுக்குச் சிறப்பு பயிற்சி வழங்கப்படும். இதனால், அவா்கள் தங்கள் உயா்கல்வி படிப்பினை நிறைவு செய்யலாம் அல்லது உரிய வேலைவாய்ப்பினைக் கண்டறியலாம் என்று கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog