சிறப்பாசிரியர்கள் போராட்டம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, January 07, 2020

Comments:0

சிறப்பாசிரியர்கள் போராட்டம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களில் போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்ற சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, ஆசிரியர் தேர்வு வாரியம் முன்பு பட்டதாரிகள் இன்று காலை முற்றுகை போராட்டம் நடத்துகின்றனர். அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள சிறப்பு ஆசிரியர்கள் பணியிடங்களில் உடற்கல்வி, தையல், இசை, ஓவிய ஆசிரியர்களை நியமிப்பதற்காக கடந்த 2017ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் சிறப்பு ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. 2017 செப்டம்பர் மாதம் நடந்த போட்டித் தேர்வில் 532 உடற்கல்வி ஆசிரியர்கள் தகுதிப் பட்டியலில் இடம்பெற்றனர். அவர்கள் விரைவில் அரசுப் பள்ளிகளில் நியமிக்கப்படுவார்கள் என்று பள்ளிக் கல்வித்துறையும் அறிவித்தது. அதற்கு பிறகு தகுதிப் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களுக்கு சான்று சரிபார்ப்பும் நடத்தினர்.
அரசு பள்ளிகளில் உடற்கல்வி, தையல், இசை, ஓவியம் உள்ளிட்ட பாடங்களுக்கு சிறப்பாசிரியர்களை நியமிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் 2017ல் தேர்வு நடத்தியது. தேர்ச்சி பெற்றோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தும் இன்னும் பணி வழங்கப்படவில்லை.தேர்ச்சி பெற்றவர்கள் நேற்று சென்னையில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். நியமன நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
சான்று சரிபார்ப்பு முடிந்து 16 மாதங்கள் கடந்த நிலையில் நியமனத்துக்கான எந்த நடவடிக்கையும் பள்ளிக் கல்வித்துறை எடுக்கவில்லை. அதற்கான கவுன்சலிங் நடத்த வேண்டும் என்று, தகுதி பெற்ற உடற்கல்வி ஆசிரியர்கள் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தனர். ஆனால், இது வரை நடவடிக்கை இல்லை. அதனால், சென்னை கல்லூரி சாலையில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகம் முன்பு இன்று காலை, மேற்கண்ட தகுதி பெற்ற 532 உடற்கல்வி ஆசிரியர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
ஆசிரியர் தேர்வுவாரியம் மூலம் 23.09.2017 அன்று நடைபெற்ற சிறப்பாசிரியர் (உடற்கல்வி, தையல், இசை, ஓவியம்) போட்டித்தேர்வை எழுதி அதன்மூலம் 532 உடற்கல்வி ஆசிரியர்கள் TRB வெளியிட்டுள்ள இறுதிபட்டியளில் இடம்பெற்றுள்ளோம். தேர்வு எழுதி இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகவும், சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து 16 மாதங்கள் கடந்தும் இன்னும் எங்களுக்கான கலந்தாய்வு மற்றும் பணிநியமனம் என்பது எங்களின் வெறும் கனவாகவே உள்ளது..
ஆகவே உடற்கல்வி துறையினருக்கான கலந்தாய்வு உடனே நடத்தி விரைவில் பணிநியமனம் செய்திட வேண்டும் என்ற நீண்டநாள் (இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக) வலியுறுத்தி தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ள உடற்கல்வி ஆசிரியர்கள் 06.01.2020 அன்று (திங்கள்கிழமை) காலை 11.00 am முதல் TRB ல் மீண்டும் ஒன்றிணைந்து எங்களது கோரிக்கையை மீண்டும் வலுவாக வலியுறுத்த உள்ளோம். கடந்த காலங்களில் ஆதரவு தந்த தாங்கள் இந்த முறையும் ஆதரவு தந்து எங்களது கோரிக்கை வெற்றி பெற உதவிட வேண்டி கேட்டுக்கொள்கின்றோம். Request Letter to CM - Download here...
தொடர்புக்கு... சேகர் (கடலூர்) 99769 86432 சரவணன் (நாகபட்டினம்) 99769 13130 ரா.தங்கேஸ்வரன் (விருதுநகர்) 99430 92312 திவ்யா (விழுப்புரம்) 82209 62996
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews