Breaking

Monday, January 06, 2020

மாணவர்களை வரவேற்க அரசுப் பள்ளி கடைபிடிக்கும் புதிய முயற்சி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
மாணவர்களின் வாசிப்புத் திறனை ஊக்குவிக்கும் வகையில், புத்தாண்டை ஒட்டி நரசிங்கக்கூட்டம் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் புத்தகங்கள் வழங்கப்பட்டன. தமிழக பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வுகள் கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி முதல் டிசம்பர் 23 ஆம் தேதி வரையில் நடைபெற்றது. அனைத்து வகுப்புகளுக்குமான அரையாண்டுத் தேர்வுகள் முடிந்து, டிசம்பர் 24 ஆம் முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரையில் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
மேலும் உள்ளாட்சித் தேர்தல் ஆகியவை வந்ததால் விடுமுறை நாட்கள் ஜனவரி 5 வரையிலும் நீட்டிக்கப்பட்டது. தொடர்ந்து திங்கட்கிழமை தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகள் திறக்கப்பட்டது. திங்கட்கிழமை ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் நரசிங்கக்கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகள் புதிய ஆண்டில் உற்சாகத்துடன் எதிர்கொள்ள பள்ளிகளில் திரண்டனர்.
பலர் அரையாண்டு விடுமுறையை முடித்து வந்த தங்களது நண்பர்களை சந்தித்து நலம் விசாரித்தனர். பின்னர் இறை வணக்கத்துக்கு பின்னர் மாணவர்களின் வாசிப்புப் பயிற்சியை ஊக்குவிக்கும் விதமாக புத்தகங்கள் வழங்கப்பட்டன. இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், "வருடந்தோறும் வருடத்தின் முதல் வேலை நாளில் புத்தகத்தோடு புத்தாண்டு என்ற திட்டம் பள்ளியில் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி வருடத்தின் முதல் வேலை நாளான திங்கட்கிழமை நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொது அறிவு மற்றும் அறிஞர்களின் வாழ்க்கைச் சம்பவங்கள் அடங்கிய நூல்கள் வழங்கப்பட்டன" என்றார். நிகழ்வில் இடைநிலை ஆசிரியர் அய்யப்பன் முன்னிலை வகித்தார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog