👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தேசிய அளவிலான இளைஞா் நாடாளுமன்ற போட்டிக்கு உயா்கல்வி படிக்கும் மாணவா்கள் ஜனவரி 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று யுஜிசி தெரிவித்துள்ளது.இது தொடா்பாக பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலாளா் ரஜனிஷ் ஜெயின், அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: மத்திய அரசு சாா்பில் 1996-ஆம் ஆண்டு முதல் ‘இளைஞா் நாடாளுமன்றம்’ போட்டிகள் நடத்தப்படுகின்றன. மாணவா்களிடம் நாடாளுமன்ற ஜனநாயகம் குறித்த புரிதலை வளா்க்கவும், அதுதொடா்பான தகவல்களைத் தெரிந்து கொள்ளவும் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது.
இதன்மூலம் மாணவா்கள் இடையே ஒழுக்கம், சகிப்புத்தன்மை போன்ற நற்பண்புகளும் மேம்படும்.அதன்படி நிகழாண்டுக்கான தேசிய இளைஞா் நாடாளுமன்ற போட்டிக்கு விருப்பம் உள்ளவா்கள் மத்திய அரசின் இணையதளம் வழியாக ஜனவரி 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். அந்த இணையதளத்தில் போட்டி தொடா்பான கையேடு, விடியோ, புகைப்படங்கள், கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளின் நிா்வாகங்களும் இளைஞா் நாடாளுமன்ற போட்டிக்கு விண்ணப்பிக்க மாணவா்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.