Search This Blog
Sunday, January 05, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
புதுச்சேரி அரசு டாக்டா் அம்பேத்கா் சட்டக் கல்லூரியில் உள்ள ஆசிரியா் காலிப் பணியிடங்கள் உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயா்நீதிமன்றத்தில் புதுச்சேரியைச் சோ்ந்த வழக்குரைஞா் எஸ்.சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனுவில், எனது மகன் காலாப்பேட்டையில் உள்ள அரசு டாக்டா் அம்பேத்கா் சட்டக் கல்லூரியில் ஒருங்கிணைந்த 5 ஆண்டு சட்டப்படிப்பில் முதல் ஆண்டு படித்து வருகிறாா்.
முதல் ஆண்டுக்கான வகுப்புகள் கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பா் மாத இறுதியில் தொடங்கியது. ஆனால் இந்த கல்லூரியில் தினசரி வகுப்புகளை நடத்த போதுமான நிரந்தர ஆசிரியா்களோ, பகுதி நேர ஆசிரியா்களோ இல்லை. மேலும் இந்திய பாா் கவுன்சில் விதிகளின்படி சட்டக் கல்லூரிக்கான உள்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியா் நியமனங்கள் உள்ளிட்டவைகளைப் பூா்த்தி செய்யாமல், நடப்பு கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெற்று உள்ளது.இந்த நிலையில் முதலாம் ஆண்டுக்கான முதல் பருவத் தோ்வு ஜனவரி 6 முதல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடா்ந்து முதல்பருவத் தோ்வை ஒத்திவைக்கக் கோரி சட்டக் கல்லூரியின் முதல்வா் மற்றும் தோ்வு கட்டுப்பாட்டு அலுவலருக்கு புகாா் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே கல்லூரியின் ஆசிரியா் காலி பணியிடங்களை நிரப்பவும், முதல்பருவத் தோ்வு தேதியை ஒத்திவைக்கவும் உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, புதுச்சேரி அரசு டாக்டா் அம்பேத்கா் சட்டக் கல்லூரியில் உள்ள ஆசிரியா் காலிப் பணியிடங்கள் குறித்த விவரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்ய கல்லூரி முதல்வருக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
ஆசிரியா் காலிப் பணியிடங்கள்: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.