Breaking

Thursday, December 26, 2019

இன்ஜி., மாணவர் சேர்க்கை கல்லுாரிகளுக்கு அரசு இலக்கு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
'இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கையில், 60 சதவீத இலக்கை அடைய, கல்லுாரிகள் முயற்சிக்க வேண்டும்' என, உயர் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழக உயர் கல்வித்துறை கட்டுப்பாட்டில், அண்ணா பல்கலை இணைப்பில், 500க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகள் மற்றும், 700க்கும் மேற்பட்ட பாலிடெக்னிக்குகள் செயல்படுகின்றன. இன்ஜினியரிங் கல்லுாரிகளில், தமிழக அரசு சார்பில், 'ஆன்லைன்' மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. பிளஸ் 2 முடித்த மாணவர்கள் மற்றும் பாலிடெக்னிக் படித்தவர்கள், இதில் சேர்க்கப்படுகின்றனர்.
அதேபோல, 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படித்தவர்கள், பாலிடெக்னிக்குகளில் நேரடியாக சேர்க்கப்படுகின்றனர். இன்ஜினியரிங் மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரிகள் என்பது, தொழில் கல்வி நிறுவனங்களாக கருதப்படுவதால், அதில் மாணவர்களை அதிகம் சேர்ப்பதன் வழியாக, தொழில் துறையை முன்னேற்ற முடியும் என, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இதன்படி, அனைத்து கல்லுாரிகளுக்கும், உயர் கல்வித் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கை:இன்ஜினியரிங் மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரிகளில், மாணவர்களை சேர்ப்பதற்கு, 2023ம் ஆண்டு வரையிலான தொலைநோக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்ஜினியரிங்கில், 60 சதவீதமாக, மாணவர் சேர்க்கையை உயர்த்த வேண்டும். அதில், இன்ஜினியரிங்கில், மாணவ -- மாணவியர், குறைந்தபட்சம் தலா, 50 சதவீதம்; பாலிடெக்னிக் கல்லுாரிகளில், தலா, 55 சதவீதம் என்ற, இலக்கை அடைய திட்டமிட வேண்டும். இதுகுறித்த நடவடிக்கைகளை, உயர் கல்வி துறைக்கு அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog