👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர் பட்டியலை, தேர்வு துறையின் இணையதளத்தில், திருத்தம் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அதிகாரிகள் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:வரும், 2020 மார்ச்சில் துவங்க உள்ள, 10ம் வகுப்பு பொது தேர்வு எழுத விரும்பும் மாணவர்களின் பெயர், முகவரி மற்றும் சுய விபரங்கள், 'எமிஸ்' என்ற, கல்வி மேலாண்மை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன.
அதைத் தொடர்ந்து, பள்ளி கள் அனைத்தும், இன்று முதல், 30ம் தேதி வரை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், மாணவர்களின் விபரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழில், பள்ளியின் பெயர் குறிப்பிடப்படும் என்பதால், பள்ளியின் பெயரை ஆங்கிலத்திலும், தமிழிலும் சரியாக குறிப்பிட வேண்டும். பள்ளியின் வகையையும் தெரிவிக்க வேண்டும். மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் பெயர், மதிப்பெண் சான்றிதழில் இடம்பெறும் என்பதால், அந்த விபரங்களையும் சரியாக குறிப்பிட வேண்டும். மாணவர்களுக்கு தேர்வு முடிவை அறிவிக்கும் வகையில், அவர்களின், மொபைல் போன் எண்ணை தெளிவாக குறிப்பிட வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
DGE - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான பள்ளி மாணாக்கர்களின் பெயர் , பிறந்த தேதி உள்ளிட்ட அனைத்து விவரங்கள் அடங்கிய பெயர் பட்டியலை EMIS - ல் பதிவேற்றம் செய்ய 18 . 11 . 2019 முதல் 29 . 11 . 2019 வரை கால அவகாசம்!
நடைபெறவுள்ள மார்ச் / ஏப்ரல் 2020 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான பள்ளி மாணாக்கர்களின் பெயர் , பிறந்த தேதி உள்ளிட்ட அனைத்து விவரங்கள் அடங்கிய பெயர் பட்டியலை EMIS - ல் பதிவேற்றம் செய்ய 18 . 11 . 2019 முதல் 29 . 11 . 2019 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது . மேற்குறிப்பிட்டவாறு தங்கள் பள்ளியில் பயிலும் அனைத்து மாணாக்கரின் விவரங்களையும் சரிபார்த்து , திருத்தம் செய்யும் பணியினை முடித்த பின்பு , தலைமையாசிரியர்கள் , 16 . 12 . 2019 முதல் 30 . 12 . 2019 வரையிலான நாட்களில் அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்திற்குச் (
www.dge.tn.gov.in ) சென்று , இத்துடன் இணைத்து அனுப்பிவைக்கப்படும் வழிமுறைகளை பின்பற்றி , மாணாக்கரது விவரங்களை சரிபார்த்து கூடுதல் விவரங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்வது தொடர்பாக பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன .
பள்ளியினை பதிவு செய்தல்
1.தலைமையாசிரியர்கள் அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்திற்குச் ( www . dge . tn . gov . in ) சென்று Online Portal for School and Educational Offices என்ற வாசகத்தினை click செய்ய வேண்டும் .
2 . அதன் பின்னர் திரையில் தோன்றும் School registration என்ற வாசகத்தினை click செய்து தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள UDISE Code ( EMIS User ID ) மற்றும் Password - ஐ பயன்படுத்தி , தங்களது பள்ளியின் பெயர் , பள்ளியின் வகை ( Management ) , மின்னஞ்சல் முகவரி , மாவட்டம் போன்ற விவரங்களை பதிவு செய்யவேண்டும் .
3 . School registration - ல் உள்ள பள்ளியின் பெயரே மதிப்பெண் சான்றிதழில் அச்சிடப்படும் என்பதால் பள்ளியின் பெயரை ஆங்கிலத்திலும் , தமிழிலும் சரியாக பதிவேற்றம் செய்யவேண்டும் . பள்ளியின் வகையினையும் ( Management ) சரியாக குறிப்பிடவேண்டும் .
4. மாணாக்கரின் பெயரை தமிழில் பதிவேற்றம் செய்யும் போது , பெற்றோர் / பாதுகாவலர் பெயரையும் முழுமையாக பதிவு செய்தல் வேண்டும் . மாணாக்கரின் பெயர் மற்றும் பெற்றோர் / பாதுகாவலர் பெயர்கள் மதிப்பெண் சான்றிதழில் பதியப்படும் என்பதால் அவற்றினை கவனத்துடன் தமிழில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் .
குறிப்பு :
ஏற்கனவே NTSE , NMMS மற்றும் + 1 தேர்வுகளின்போது School registration பணியினை மேற்கொண்ட பள்ளிகள் மீண்டும் இப்பணியினை செய்யத் தேவையில்லை
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.