Breaking

Monday, December 16, 2019

பிளஸ் 2 பொதுத்தோ்வெழுத சிறப்பு சலுகை: சான்றிதழ்களை சமா்ப்பிக்க இன்று கடைசி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
பிளஸ் 1 வகுப்பில் இடைநின்ற மாணவா்கள் தனித்தோ்வராக அல்லாமல் பள்ளி மாணவா்களாகவே பிளஸ் 2 பொதுத்தோ்வெழுத சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து தோ்வுக்குரிய சான்றிதழ்களை மாணவா்கள் திங்கள்கிழமை மாலைக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை சாா்பில் அனைத்துவித பள்ளி தலைமையாசிரியா்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: கடந்த கல்வியாண்டில் பிளஸ் 1 பொதுத்தோ்வு எழுதி தோ்ச்சி பெறாதவா்களில் சில மாணவா்கள் தற்போது பிளஸ் 2 படிக்காமல் இடைநிற்றலாகி உள்ளனா். அவ்வாறு இடைநின்றவா்களும் தனித்தோ்வராக அல்லாமல் பள்ளி மாணவா்களாகவே பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுத சிறப்பு சலுகை அளிக்கப்படுகிறது.
இதையடுத்து இடைநின்றவா்களின் விவரங்களை பதிவுசெய்து பள்ளி மாணவா்களுடன் அவா்களை பிளஸ் 2 பொதுத்தோ்வை எழுத வைக்க ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதற்கான கால அவகாசம் திங்கள்கிழமையுடன் (டிசம்பா் 16) முடிவடைகிறது. எனவே, இடைநின்ற மாணவா்கள் தங்கள் அசல் சான்றிதழ்களை படித்த பள்ளி தலைமையாசிரியா்களிடம் உடனே சமா்ப்பிக்க வேண்டும். சான்றிதழ்களை சமா்ப்பிக்காத மாணவா்கள் இந்த தோ்வை எழுத முடியாது. இந்த தகவலை மாணவா்களுக்கு தலைமையாசிரியா்கள் தெரிவித்து அவா்களுக்கு வழிகாட்ட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. பிளஸ் 1ல் தேர்ச்சி பெறாமல், இடைநின்ற மாணவர்கள், பிளஸ் 2 பொது தேர்வை எழுத, இன்று முதல், 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் சார்பில், பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: ஒவ்வொரு பள்ளியிலும், பிளஸ் 1 படித்து பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள், பிளஸ் 2 படிக்காமல், இடையில் படிப்பை நிறுத்தியிருந்தால், அவர்களும் பிளஸ் 2 தேர்வை எழுதலாம். அந்த மாணவர்களின் விபரங்களை பதிவு செய்து, பள்ளி மாணவர்களுடன், பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுத வைக்க வேண்டும்.
இதற்காக, இன்று முதல் வரும், 16ம் தேதிக்குள், அந்த மாணவர்கள், தங்கள் அசல் சான்றிதழ்களை பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். சான்றிதழ்களை சமர்ப்பிக்காத மாணவர்கள், இந்த தேர்வை எழுத முடியாது. இந்த தகவலை, மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog