ஆன்லைன் வங்கி சேவைகளை உபயோகப்படுத்துபவரா.. ஹேப்பி நியூஸ்..! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, December 15, 2019

Comments:0

ஆன்லைன் வங்கி சேவைகளை உபயோகப்படுத்துபவரா.. ஹேப்பி நியூஸ்..!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
பிரதமர் மோடியின் கணவை நனவாக்கும் பொருட்டு நாடு முழுவதும் டிஜிட்டல் சேவைகள் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அதிலும் ஒவ்வொரு துறையிலும் டிஜிட்டல் பயன்பாட்டை உபயோகப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் டிஜிட்டல் சேவைகளை ஊக்கப்படுத்தும் விதமாக, ஆன்லைன் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. நெஃப்ட் 24 மணி நேரமும் நெஃப்ட் சேவை அந்த வகையில் நெஃப்ட் எனப்படும் நேஷனல் எலக்ட்ரானிக் ஃபண்ட் டிரான்ஸ்பர் (NEFT) மூலமாக 24 மணி நேரமும் பணப் பரிவர்த்தனை செய்ய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இந்த அதிரடி சேவையானது வரும் டிசம்பர் 16 முதல் அமலுக்கு வர உள்ளது. இந்த அதிரடி முடிவானது சில்லறை பணம் செலுத்துதல் முறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்ப்பதாக ரிசர்வ் வங்கி முன்னரே அறிவித்திருந்தது கவனிக்கதக்கது.
எப்படி? இப்போது எவ்வளவு நேரம்? ரிசர்வ் வங்கியின் சில்லறை செலுத்துதல் சிஸ்டம் மூலமாக தற்போது, பணி நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே நெஃப்ட் மூலமாக பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும். நெஃப்ட் சிஸ்டம் மூலமாக 2 லட்சம் ரூபாய் வரையில் பணப்பரிவர்த்தனை செய்யலாம். முன்னதாக கடந்த ஜூன் மாதம் முதல், ஆர்.டி.ஜி.எஸ். எனப்படும் ரியல் டைம் செட்டில்மெண்ட் சிஸ்டம் (Real Time Gross Settlement System) மற்றும் நெஃப்ட் முறையில் பணப்பரிவர்த்தனை செய்ய கட்டணம் கிடையாது என்று அறிவித்தது. இந்த நிலையில் இத்தகையதொரு சலுகையை வாரி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆன்லைன் சேவை அனைத்து நாட்களும் ஆன்லைன் சேவை நாளை முதல் அமலுக்கு வரவிருக்கும் நெஃப்ட் மூலம் 24 மணி நேரமும் வாரத்தின் 7 நாட்களும் ஆன்லைன் பணப்பரிமாற்ற சேவை வழங்கப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் ஆர்.டி.ஜி.எஸ், நெஃப்ட், ஐ.எம்.பி.எஸ் ஆகிய மூலம் ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு மின்னணு முறையில் பணப்பரிமாற்ற செய்யமுடியும். விடுமுறை விடுமுறை நாட்களிலும் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம் ஆனால் வங்கி நேரங்களுக்கு மட்டுமே, இந்த சேவையை பயன்படுத்தி பணப்பரிமாற்றம் செய்ய முடியும். இந்நிலையில், நெஃப்ட் சேவையில் தற்போது இந்த நடைமுறை நாளை முதல் அமலுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. இந்த டிஜிட்டல் ஊக்குவிப்பு சேவையானது விடுமுறை நாட்கள் உட்பட ஆண்டின் அனைத்து நாட்களிலும் நெஃப்ட் சேவை வழங்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் இந்தியா டிஜிட்டல் இந்தியா கனவு பிரதமர் மோடியின் கனவை நினைப்படுத்தும் விதமாக இந்த சேவை நீட்டிப்பானது வாடிக்கையாளர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இனி விடுமுறை நாட்கள், வங்கி நேரம் முடிவு என இல்லாமல், நமக்கு ஏற்றாற்போல் விருப்பம் போல பண பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். இது முழுக்க முழுக்க மக்கள் இணைய சேவையை பயன்படுத்தும் விதமாக அமையும் என்றும் கருதப்படுகிறது.
ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் டிஜிட்டல் பண பரிவர்த்தனை நாள் முழுவதும் எளிதாக மேற்கொள்ளும் வசதி கிடைத்துள்ளது. இது பணபுழக்கத்தை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. அதாவது தேசிய மின்னணு நிதி பரிவர்த்தனை ( என்இஎப்டி) எனப்படும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை நாள் முழுவதும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த வசதி நாளை முதல் (டிசம்பர் 16ம் தேதி) அமல்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த முறையில் வங்கிகள் மற்றும் அதன் வாடிக்கையாளர்கள் ஓர் வங்கி கணக்கில் இருந்து மற்றொரு வங்கி கணக்கிற்கு எளிதில் பணம் பரிவர்த்தனை செய்யலாம். குறிப்பிட்ட நேரத்துக்கு பின் இந்த வசதியை பயன்படுத்த முடியாது; விடுமுறை நாளிலும் இது செயல்படாது.
ஆனால் ஆண்டு முழுவதும் ஒரு நாள் விடாமல் இந்த வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு தேவையான முன்னேற்பாடுகளை அனைத்து வங்கிகளும் எடுத்துள்ளன. சேமிப்பு கணக்கில் இருந்து ஆன்லைனில் பணம் அனுப்புவதற்கான என்இஎப்டி கட்டணம் ஜனவரி 1ம் தேதியில் இருந்து ரத்து செய்யப்படுவதாக ரிசர்வ் வங்கி கடந்த மாதம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. வங்கிக் கணக்கில் இருந்து ஆன்லைன் மூலம் என்இஎப்டி மற்றும் ஆர்டிஜிஎஸ் முறையில் பணம் அனுப்பப்படுகிறது. என்இஎப்டி முறையில் ரூ.2 லட்சம் வரையிலான பரிவர்த்தனைகளும், அதற்கு மேல் ஆர்டிஜிஎஸ் முறையிலும் பணம் அனுப்பப்படுகிறது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews