பல்கலையில் விதிமீறி பணி நியமனங்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, December 18, 2019

Comments:0

பல்கலையில் விதிமீறி பணி நியமனங்கள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
'மதுரை காமராஜ் பல்கலையில் மாஜி துணைவேந்தர் செல்லத்துரை பதவி காலத்தில் நடந்த பணி நியமனங்களில் விதிமீறல் நடந்துள்ளது' என ஓய்வு நீதிபதி அக்பர் அலி கமிட்டி சுட்டிக்காட்டியும் தவறு செய்தோர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து இன்று (டிச.,18) நடக்கும் செனட் கூட்டத்தில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்ப உள்ளனர்.மாஜி துணைவேந்தர் செல்லத்துரை பதவிகாலத்தில் 2017 மே 27 முதல் 2018 ஜூன் 14 வரை பல்கலையில் விதிமீறி 100க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர், தற்காலிக பணியாளர், துப்புரவு பணியாளர் நியமிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து ஓய்வு நீதிபதி அக்பர் அலி தலைமையில் உயர்மட்ட குழு விசாரணை நடத்தி நவ.,5ல் அறிக்கை தாக்கல் செய்தது.அதில், 'தவறு நடந்ததற்கான முகாந்திரம் உள்ளது.
நியமனங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என குறிப்பிடப்பட்டது. இதன் அடிப்படையில் தவறு செய்தோர் மீது இதுவரை ஏன் நடவடிக்கை இல்லை. இது சந்தேகங்களுக்கு வழிவகுக்கிறது.இதுகுறித்து பெயர் சொல்ல விரும்பாத பேராசிரியர்கள் கூறியதாவது:செல்லத்துரை பதவியில் இருந்தபோது பதிவாளராக இருந்தவர் சின்னையா. அனைத்து நியமனங்களிலும் இவர்தான் கையெழுத்திட்டுள்ளார். உறுப்புக் கல்லுாரிகளில் நடந்த பல நியமனங்களுக்கு இவர் ஒப்புதல் அளித்துள்ளார்.இவரது உறவினர் பலர் பணிவாய்ப்பு பெற்றுள்ளனர். இவரது ஆய்வு மாணவர் உதவி பேராசிரியரான முருகன். இவர் பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் கைதானவர். முருகனின் சகோதரிக்கு அருப்புக்கோட்டை உறுப்புக்கல்லுாரியில் கண்காணிப்பாளர் பணி வழங்கப்பட்டுள்ளது. தொகுப்பூதியத்தில் கண்காணிப்பாளர் நியமிக்க முடியாது என்ற விதி இருந்தும் அது மீறப்பட்டுள்ளது.மாலை நேரக் கல்லுாரி இயக்குனர்கள் நியமனத்திலும் முறைகேடுகள் நடந்தன.
தேனியில் மாணவர் சேர்க்கை, தேர்வு கட்டணம் உட்பட ரூ.2 கோடிக்கும் மேலான கணக்குகளை ஐந்து ஆண்டுகளாக பல்கலைக்கு சமர்ப்பிக்க வில்லை. இங்கு இயக்குனராக நாராயணபிரபு இருந்தார். அவரை நியமித்த கமிட்டியில் சின்னையாவும் ஒரு உறுப்பினர். இந்த கமிட்டியில் உறுப்பினராக பதிவாளர் இருந்தது விதிமீறல்.திருமங்கலம் உட்பட பல உறுப்புக்கல்லுாரிகளில் சின்னையா பரிந்துரையில் பல நியமனங்கள் நடந்துள்ளன. மதுரை பாத்திமா கல்லுாரி முதல்வர் நியமனத்தில், 'கல்வித் தகுதி குறித்து ஒப்புதல் வழங்க இயலாது' என டீன்நல்லகாமன் தெரிவித்த போதும், 'சட்டக் கருத்தை பெறலாம்' என சின்னையா உத்தரவிட்டார். இந்த முடிவை பல்கலை விதிப்படி துணைவேந்தர் மட்டுமே எடுக்க முடியும். பல்கலை வளர்ச்சியை முடக்கும் வகையில் இதுபோன்று விதிமீறலில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews