👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தேனி மாவட்டம் பொன்னன்படுகை ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி சத்துணவு சமையல் கூடம் இடிந்து விழுந்ததில் மாணவர்கள் இருவர் காயமடைந்தனர்.பொன்னன்படுகை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் பழுதடைந்த சத்துணவு சமையல் கூடம் கட்டடம் பல ஆண்டாக இடிக்கப்படாமல் இருந்தது. நேற்று பகல் 1:30 மணியளவில் 8ம் வகுப்பு மாணவர் செல்வக்குமார் 14, 6ம் மாணவர்கள் ஈஸ்வரன்12, முத்துப்பாண்டி 12, ஆகியோர் அக்கட்டடத்தில் உள்ளே விளையாட சென்றபோது திடீரென இடிந்து விழுந்தது.
இதில் செல்வக்குமாருக்கு இடது கை மற்றும் இடுப்பு பகுதியில் பலத்த காயமும், ஈஸ்வரனுக்கு வலது காலில் காயம் ஏற்பட்டு தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். முத்துப்பாண்டி காயமின்றி தப்பினார். மயிலாடும்பாறை போலீசார் விசாரிக்கின்றனர். அதிகாரிகள் பழுதடைந்த கட்டடங்களை அகற்றியிருந்தால் இந்த விபத்தை தவிர்த்திருக்கலாம்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.