Breaking

Monday, December 16, 2019

பதவி உயர்வு முறைகேடு அண்ணா பல்கலை விசாரணை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
பேராசிரியர்களுக்கான பதவி உயர்வில், முறைகேடு நடந்துஉள்ளதா என்பது குறித்து, அண்ணா பல்கலை விசாரணையை துவங்கியுள்ளது. பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில் பணியாற்றும் உதவி பேராசிரியர்கள், இணை பேராசிரியர்களாகவும்; இணை பேராசிரியர்கள், பேராசிரியர்களாகவும் பதவி உயர்வு செய்யப்படுவர். இதற்கு, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி.,யின் விதிமுறை களை, பல்கலைகள் பின்பற்ற வேண்டும். இந்த பதவி உயர்வுக்கு, ஆசிரியர்களின் பணி திறன், அனுபவம், ஆராய்ச்சி செயல்பாடுகள் போன்றவை கணக்கில் கொள்ளப்படும்.
இந்நிலையில், அண்ணா பல்கலையில், ஓராண்டுக்கு முன் நடந்த பதவி உயர்வில், சிலர் போலியான தகவல்களை கொடுத்து, பதவி உயர்வு பெற்றதாக, புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த, அண்ணா பல்கலை துணை வேந்தர் சுரப்பா உத்தரவிட்டுள்ளார். ஆசிரியர்கள் அளித்த தகவல்கள் மற்றும் அதன் உண்மை தன்மையை ஆய்வு செய்ய, ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக, பல்கலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog