கட்டண உயர்வு.., புதிய வோடபோன் ஐடியா ப்ரீபெய்டு ரீசார்ஜ் பிளான்கள் வெளியானது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, December 01, 2019

Comments:0

கட்டண உயர்வு.., புதிய வோடபோன் ஐடியா ப்ரீபெய்டு ரீசார்ஜ் பிளான்கள் வெளியானது

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
டெலிகாம் நிறுவனங்களில் முதல் நிறுவனமாக வோடபோன் ஐடியா தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு கட்டணத்தை உயர்த்தியுள்ளது. வரும் டிசம்பர் 3 ஆம் தேதி முதல் புதிய பிளான்கள் செயற்பாட்டுக்கு வருகின்றது.
ப்ரீபெய்ட் பயனாளர்களுக்கு புதிய திட்டங்களை 2 நாட்கள், 28 நாட்கள், 84 நாட்கள், 365 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் இந்நிறுவனம் அறிவித்துள்ளது. முந்தைய திட்டங்களுடன் ஒப்பிடும்போது புதிய திட்டங்கள் 42% வரை விலை உயர்ந்தப்பட்டுள்ளதாக தோராயமான கணக்கீடு குறிப்பிடுகின்றது.
இன்றைக்கு அறிவிக்கப்பட்டுள்ள இன்று அதன் ப்ரீபெய்ட் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான புதிய கட்டணங்கள் / திட்டங்கள் 3 டிசம்பர் 2019 முதல் 00:00 மணி முதல் இந்தியா முழுவதும் புதிய திட்டங்கள் கிடைக்கும் "என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது. 2 நாட்கள் வேலிடிட்டி பிளான்
வரம்பற்ற பேக்குகளின் கீழ், ரூ 19 மதிப்புள்ள பிளானில் வரம்பற்ற குரல் அழைப்புகள் (வோடபோன் டூ வோடபோன் ), 150 எம்பி டேட்டா, 100 எஸ்எம்எஸ் ஆகியவை இரண்டு நாட்கள் செல்லுபடியாகும்.
28 நாட்கள் வேலிடிட்டி பிளான்
ரூ.49 காம்போ பிளானில் ரூ.38 மதிப்புள்ள டாக்டைம், 100 எம்பி டேட்டா மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் அனைத்து அழைப்புகளும் விநாடிக்கு 2.5 பைசா என (நிமிடத்திற்கு ரூ.1.50) ஆகும்.
ரூ.79 காம்போ பிளானில் ரூ.68 மதிப்புள்ள டாக்டைம், 200 எம்பி டேட்டா மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் அனைத்து அழைப்புகளும் விநாடிக்கு 1 பைசா என (நிமிடத்திற்கு 60 பைசா) ஆகும்.
ரூ.149 அன்லிமிட்டேட் பிளானில் வரம்பற்ற ஆன்-நெட் அழைப்புகள் மற்றும் 1000 நிமிட ஆஃப்-நெட் அழைப்புகள், 2ஜிபி டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ் மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படும்.
ரூ,249 அன்லிமிட்டேட் பிளானில் வரம்பற்ற ஆன்-நெட் அழைப்புகள் மற்றும் 1000 நிமிட ஆஃப்-நெட் அழைப்புகள், நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படும்.
ரூ.299 அன்லிமிட்டேட் பிளானில் வரம்பற்ற ஆன்-நெட் அழைப்புகள் மற்றும் 1000 நிமிட ஆஃப்-நெட் அழைப்புகள், நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படும்.
ரூ.399 அன்லிமிட்டேட் பிளானில் வரம்பற்ற ஆன்-நெட் அழைப்புகள் மற்றும் 1000 நிமிட ஆஃப்-நெட் அழைப்புகள், நாள் ஒன்றுக்கு 3 ஜிபி டேட்டா மற்றும் நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படும்.
84 நாட்கள் வேலிடிட்டி பிளான்
ரூ.379 அன்லிமிட்டேட் பிளானில் வரம்பற்ற ஆன்-நெட் அழைப்புகள் மற்றும் 3000 நிமிட ஆஃப்-நெட் அழைப்புகள், மொத்தமாக 6 ஜிபி டேட்டா மற்றும் மொத்தமாக 1000 எஸ்எம்எஸ் மற்றும் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படும்.
ரூ.599 அன்லிமிட்டேட் பிளானில் வரம்பற்ற ஆன்-நெட் அழைப்புகள் மற்றும் 3000 நிமிட ஆஃப்-நெட் அழைப்புகள், நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படும்.
ரூ.699 அன்லிமிட்டேட் பிளானில் வரம்பற்ற ஆன்-நெட் அழைப்புகள் மற்றும் 3000 நிமிட ஆஃப்-நெட் அழைப்புகள், நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படும்.
365 நாட்கள் வேலிடிட்டி பிளான்
ரூ.1499 அன்லிமிட்டேட் பிளானில் வரம்பற்ற ஆன்-நெட் அழைப்புகள் மற்றும் 12000 நிமிட ஆஃப்-நெட் அழைப்புகள், மொத்தமாக 24 ஜிபி டேட்டா மற்றும் மொத்தமாக 3600 எஸ்எம்எஸ் மற்றும் 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படும்.
ரூ.2399 அன்லிமிட்டேட் பிளானில் வரம்பற்ற ஆன்-நெட் அழைப்புகள் மற்றும் 12000 நிமிட ஆஃப்-நெட் அழைப்புகள், நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படும்.
முதல் ரீசார்ஜ் பிளான்கள்
நிமிடத்திற்கு 6 பைசா கட்டணம்
மற்ற நெட்வொர்க்குகளுக்க வழங்கப்பட்டுள்ள ஆஃப்நெட் FUP நிமிடங்களை கடந்த பிறகு நிமிடத்திற்கு 6 பைசா வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews