கல்வியில் அதிரடி மாற்றத்திற்கு தயாராகும் தமிழகம்...! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, December 28, 2019

Comments:0

கல்வியில் அதிரடி மாற்றத்திற்கு தயாராகும் தமிழகம்...!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
பின்லாந்து நாட்டின் கல்வி முறையை தமிழ்நாட்டில் பின்பற்ற அரசு முயற்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. அப்படி என்ன இருக்கிறது அந்நாட்டு கல்வி முறையில்..?? பின்லாந்து நாட்டின் கல்வி முறை - வரவேற்பும்- எதிர்பார்ப்பும்-என்ற தலைப்பில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது அதன்தமுழு விவரம் பின்வருமாறு :- தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்தறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுவருகிறது.
அதில் குறிப்பாக கல்வி அமைச்சர் கல்விக்குழுவினருடன் பின்லாந்து நாட்டிற்கு சென்று அங்கிருக்கும் கல்விமுறையினை அறிந்துவந்ததும் அந்நாட்டு கல்வியாளர்கள் இங்கு வந்ததும் மாற்றங்களுக்கான முதல்படியாகவே கருதுகிறோம். பின்லாந்தில் அப்படியென்ன கல்வி முறை? கேள்விக்குள் நுழைந்தால் அந்நாட்டின் மொத்த மக்கள் தொகை தமிழ்நாட்டின் தலை நகரான சென்னையின் மக்கள் தொகையளவுதான் இருக்கும். சரியாக 55,36,306 பேர்கள் கொண்டகுட்டி குடியரசு நாடான வடக்கு ஐரோப்பாவிலுள்ள பின்லாந்து. கல்விமுறை7 வயதே தொடக்கப்பள்ளியில் சேர்க்கும் வயதாகும்.
தொடக்கநிலை 1 முதல் 6 வகுப்பாகவும் இடைநிலை வகுப்புகள் 7 முதல் 9 வகுப்புகளாகவும் உள்ளன. 16 வயது வரை தேர்வு முறையில் மதிப்பெண்கள் மூலமாகவும் மதிப்பீடு மூலமாகவும் தேர்ச்சி என்பதில்லை. மாறாக மாணவர்கள் விரும்பி தேர்வு செய்துபடிக்கும் முறையில் ஆசிரியர்கள் உதவுவார்கள் . மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் என்பது அறவே இல்லை அச்சுறுத்தலும் இல்லை பயமில்லாமல் சுதந்திரமாக படிக்கும் முறையென்பதால் இடைநிற்றலும் இல்லை. இன்னும் தனியார் பள்ளிகளே இல்லை என்பது கூடுதல் சிறப்பு. பிரதமர் மகனும் சாதாரண விவசாயின் மகனுக்கும் ஒரே மாதிரி கல்வி தான். அங்கு அரசுப்பள்ளிகள் மட்டும்தான். கல்வியில் பேதமில்லை. கல்வி, விளையாட்டு, இசை, ஓவியம் உள்ளிட்டவை போதிக்கப்படுகிறது. தாய்மொழியோடு மற்றொரு மொழியும் போதனை மொழிகளாகும். ஒரு நாளைக்கு 4 மணி நேரம் தான் வகுப்புகள். ஒவ்வொரு பாடவேளைக்கும் 15 நிமிடங்கள் இடைவேளை மாணவர்கள் விருப்பப்படி பள்ளியில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்.உணவு இடைவேளை 1.30 மணி நேரம்.ஆரோக்கியமான சூழலில் பள்ளிகளில் சிறந்த உட்கட்டமைப்பு வசதியுடன் சுதந்திரமாக விரும்பி கற்கும் நிலை உள்ளதால் உலகநாடுகள் நத்தும் போட்டித்தேர்வுகளில் பின்லாந்து மாணவர்களால் சாதிக்கமுடிகிறது என்றால் அது மிகையாகாது.
மேலும் ஆசிரியர்களின் *தகுதி ஆசிரியராகப் பணிப் புரிய குறைந்தபட்சம் முதுகலை பட்டம் படித்தவர்களே நிர்ணயம். பி.எச்.டி முடித்தவர்கள் தான் உயநிலை வகுப்புகள் என்று தகுதி வாய்ந்த ஆசிரியர்கள்.மாணவர்களைவிட அதிக கவனம் ஆசிரியர்கள் மீது அவர்களை உருவாக்க. அரசு அதிக அக்கரைக்கொண்டு பல பயிற்சிகள் மூலமாக மெருகேற்றுவார்கள் தகுதியான ஆசிரியர்களை உருவாக்கிவிட்டால் போதும் சிறந்த மாணவர்களை ஆசிரியர்கள் உருவாக்குவார்கள். ஆசிரியர்கள் மனநிறைவோடு பணியாற்ற அனைத்துவகையிலும் வசதி செய்யப்பட்டுள்ளது. சம்பள பிரச்சினையில் ஏற்றத்தாழ்வில்லை.நாட்டிலேயே அமைச்சர்களுக்கு அடுத்து ஆசிரியர் பணி உயர் பணியாக கருதப்படுகிறது.
குறிப்பாக அரசின் கொள்கை திட்டம் செயலாக்கத்தில் ஆசிரியர்களின் ஆலோசனைப் பெறப்படுகிறது. கல்வி முறையில் இத்தனை சிறப்பம்சங்களைக் கொண்டு அனைத்து நிலையிலும் கல்வி இலவசமாக வழங்குவதால் உலகநாடுகளில் பின்லாந்து கல்விமுறை கவனிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இம்முறையினை எதிர்பார்ப்பதில் அதிக ஆர்வமிருப்பது வரவேற்புக்குரியது. உடனடியாக செயல்படுத்த முடியாதெனினும் படிப்படியாக செயல்படுத்தமுடியும். 8 கோடி மக்கள் தொகையினை நாம் நெருங்கிவரும் நிலையில் இது சாத்தியமா என்பதைவிட நம் மாநிலத்திலும் முடியும் என்ற நம்பிக்கையோடு சமரசமில்லா நடவடிக்கையோடு செயல்பட்டால் எதுவும் முடியும்.நீக்கவேண்டியதை உடனே நீக்கவேண்டும் .
அங்கு 7 வயதுக்கு பிறகே பள்ளியில் சேர்க்கை.இங்கு பால்மனம் மாறா குழந்தைகளை பள்ளியில் சேர்த்து மழலையிலேயே சுதந்திரத்தைப் பறிக்கிறோம். அங்கு 16 வயதுக்குப்பிறகே தேர்வு இங்கு 5 ஆம் வகுப்பிற்கே பொதுத்தேர்வினை திணித்து பிஞ்சுகளின் பொழுதுகளைக் களவாடுகிறோம். எது சிறந்தக்கல்வி என்று ஆராய்கின்றோமே தவிர எது குழந்தைக்கு ஏற்றக்கல்வி என்பதை கவனிக்கத் தவறிவிட்டோம். இனிவரும் காலங்களிலாவது மாற்றங்கள் ஏமாற்றங்களாக மாறாமல் முழுமையாக ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டியத் தருணத்தினை பயன்படுத்துவோம்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews