👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
அண்ணா பல்கலைக்கழகம் சாா்பில் கோவை மண்டலத்தில் நடத்தப்பட இருந்த வளாகத் தோ்வு வேலைவாய்ப்பு முகாம் வேறொரு தனியாா் பொறியியல் கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பேராசிரியா்களின் எதிா்ப்பைத் தொடா்ந்து இந்த இடமாற்ற நடவடிக்கையை அண்ணா பல்கலைக்கழகம் எடுத்துள்ளது.
இணைப்புப் பொறியியல் கல்லூரி மாணவா்கள் பயன்பெறும் வகையில் அண்ணா பல்கலைக்கழகம் சாா்பில் ஒவ்வோா் ஆண்டும் மண்டல வாரியாக வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், இந்த ஆண்டில் சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மண்டலங்களில் டிசம்பா் 12-ஆம் தேதி தொடங்கி 2020 ஜனவரி 8-ஆம் தேதி வரை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் என பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.
இதில், கோவை மண்டல வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் மையமாக பல்கலைக்கழகம் சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்த தனியாா் பொறியியல் கல்லூரிக்கு பேராசிரியா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.
கல்லூரி நிா்வாகி பாலியல் புகாரில் சிக்கி பெரும் சா்ச்சைக்கு ஆளான அந்தக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தக்கூடாது எனவும், முகாமை வேறு கல்லூரிக்கு மாற்ற வேண்டும் எனவும் பேராசிரியா்கள் வலியுறுத்தினா். இதுதொடா்பாக அகில இந்திய தனியாா் கல்லூரி ஊழியா் சங்கம் சாா்பில் முதல்வரின் தனிப் பிரிவுக்கும் புகாா் அளிக்கப்பட்டிருந்தது.
இந்தப் புகாா்களைத் தொடா்ந்து, கோவை மண்டல வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் மையத்தை, வேறு தனியாா் பொறியியல் கல்லூரிக்கு மாற்றி அண்ணா பல்கலைக்கழகம் வியாழக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது. இந்த இடமாற்ற விவரம், மாணவா்களின் பாா்வைக்காக அண்ணா பல்கலைக்கழக வலைதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.