Search This Blog
Monday, December 09, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
வேறு நெட்வொர்க்குகளுக்கும் இனி அளவில்லாமல் பேசலாம் என, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ஜியோ வருகையால் தொலைத்தொடர்ப்பு நிறுவனங்கள் கடும் நஷ்டத்தை சந்தித்தன. அதிகபட்சமாக வோடபோன் ஐடியா நிறுவனம் ₹50,000 கோடிக்கு மேல் நஷ்டம் அடைந்ததாக அறிவித்தது. இந்நிலையில், நஷ்டத்தை சமாளிக்கும் வகையில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் அழைப்பு மற்றும் இணைய பயன்பாட்டுக்கான பேக்கேஜ் கட்டணங்களை 42 சதவீதம் வரை உயர்த்தின. இது கடந்த 3ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. அதோடு, வேறு நெட்வொர்க்கிற்கு அதிகபட்சமாக 3000 நிமிடங்கள் வரைதான் பேச முடியும் என அறிவித்தன. கட்டணமும் உயர்ந்து பயன்பாட்டுக்கும் கட்டுப்பாடு விதித்ததால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.
இதை தொடர்ந்து, ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் கட்டுப்பாட்டை தளர்த்தியுள்ளன. இதன்படி, வேறு நெட்வொர்க்குகளுக்கு விதிக்கப்பட்டிருந்த அழைப்பு வரம்பு நீக்கப்படுகிறது என தெரிவித்துள்ளன. இதனால் வேறு நெட்வொர்க்குகளுக்கு வாடிக்கையாளர்கள் இனி அளவில்லாமல் பேச முடியும். ஜியோவால் பாதிக்கப்பட்ட இந்த நிறுவனங்கள், ஜியோவுக்கு போட்டியாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
செல்போன் கட்டணங்களில் மற்ற நெடவொர்க் வாடிக்கையாளர்களுடன் பேசுவதற்கு வோடஃபோன், ஜியோ, ஏர்டெல் கட்டணம் நிர்ணயித்த நிலையில் திடீரென ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்கள் மற்ற நெட்வொர்க் வாடிக்கையாளர்களுடன் பேசும் கட்டணத்தை நீக்கி இலவசமாக்கியுள்ளது.
பாரதி ஏர்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "சில நாட்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட புதிய கட்டணத் திட்டங்களுடன் அறிவிக்கப்பட்ட மற்ற நெட்வொர்க் உடனான குரல் அழைப்பு வரம்பு அகற்றப்படுகிறது" என அறிவித்துள்ளது.
இதேபோன்று வோடஃபோன் நிறுவனமும் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இலவச, கட்டணமில்லா அழைப்புகள் குறித்து அறிவித்துள்ளது.
சமீபத்தில் ஜியோ தனது வாடிக்கையாளர் பயன்பாட்டுத் திட்டத்தை மாற்றியது. அதன்படி இனி வாடிக்கையாளர்கள் அடுத்த நெட்வொர்க்கை அழைத்தால் ஒரு நிமிடத்திற்கு 6 பைசா என கட்டணம் நிர்ணயித்தது.
இதையடுத்து வோடஃபோன், ஏர்டெல் நிறுவனங்களும் வாடிக்கையாளர் கட்டணத்தை மாற்றி அமைத்து மற்ற நெட்வொர்க்குகளுக்கு பேசுவதற்குக் கட்டணம் நிர்ணயித்தன. இந்நிலையில் நேற்று ஏர்டெல் நிறுவனம் தனது சலுகையை அறிவித்தது. அதைத் தொடர்ந்து வோடஃபோன் நிறுவனமும் தனது சலுகையை அறிவித்துள்ளது.
அதன்படி இனி அடுத்த நெட்வொர்க் பயன்பாட்டாளர்களுடன் தொடர்வதற்கான கட்டணம் இல்லை. கட்டண வரம்பற்ற இலவச அழைப்புகள் என்று அறிவித்துள்ளன. ஜியோ விரைவில் வரம்பற்ற இலவச அழைப்புகள் திட்டத்தை அறிவிக்க உள்ளதாகக் தகவல் வெளியான நிலையில் இவ்விரு நிறுவனமும் முந்திக் கொண்டன.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
ஏர்டெல், வோடபோனில் எல்லா அழைப்புகளும் இனி அளவின்றி பேசலாம்: இலவச நிமிட வரம்பு நீக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.