👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
பள்ளிக் கல்வித்துறைக்காக புதிய உருவாக்கப்பட்டுள்ள ஆணையர் பதவிக்கான அரசாணை நேற்று வெளியானது. இதையடுத்து, பள்ளிக் கல்வித்துறை, தொடக்க கல்வித்துறை, அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஆகியவற்றின் செயல்பாடுகளை புதிய ஆணையர் மேற்பார்வையிடுவார். பள்ளிக் கல்வித்துறைக்காக இதுவரை இல்லாத அளவில் ஆணையர் பதவி உருவாக்கப்பட்டு அதற்கான அறிவிப்பை கடந்த வாரம் அரசு வெளியிட்டது. பள்ளிக் கல்வித்துறையின் புதிய ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி சிஜிதாமஸ் வைத்யன் நியமிக்கப்பட்டார். இதையடுத்து, அவருக்காக பிரத்யேக அலுவலகம் ஒன்றை டிபிஐ வளாகத்தில் கல்வித்துறை அதிகாரிகள் தயார் செய்துள்ளனர். பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் முன்பு செயல்பட்ட ஆர்எம்எஸ்ஏ மாநில திட்ட இயக்குநர் அலுவலக அறையை தற்போது புதிய ஆணையராக நியமிக்கப்பட்டு சிஜிதாமஸ் வைத்யனுக்கு ஒதுக்கியுள்ளனர். இதையடுத்து, அவர் நேற்று காலை டிபிஐ வளாகத்தில் உள்ள மேற்கண்ட அலுவலகத்தில் பொறுப்பேற்பதாக இருந்தது. ஆனால் தலைமைச் செயலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டதால் பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில், ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள சிஜிதாமஸ் வைத்யனுக்கான பணிகள் குறித்த ஆணையை பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ளார். அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: பள்ளிக் கல்வித்துறைக்கான புதிய ஆணையர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது மேலும், பள்ளிக் கல்வித்துறையில் இந்திய ஆட்சிப் பணியையும் சேர்த்து பலப்படுத்தவும் இந்த பதவி உருவாக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2014ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது.
இதையடுத்து ஐஏஎஸ் அதிகாரி சிஜி தாமஸ் வைத்யன் புதிய ஆணையராக நியமிக்கப்படுகிறார். அவர் பள்ளிகளின் செயல்பாடுகள், ஒழுங்குமுறை ஆகியவற்றை கண்காணிப்பார். இதன்படி பள்ளிக் கல்வி இயக்ககம், தொடக்க கல்வி இயக்ககம், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம், அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஆகியவற்றின் செயல்பாடுகளையும் உன்னிப்பாக கண்காணிப்பார். கல்வி சார்ந்த களப்பணிகளின் மீதான ஆய்வுகள் கருத்துகளையும் தெரிவித்து கல்வியை மேம்படுத்துவும் , அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை செயல்படுத்துவதில் குறைகள் இருந்தால் அதை கண்காணிப்பது, கல்வித்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்களையும் மேற்பார்வையிடுதல், அரசின் தொடர்ச்சியான செயல்பாடுகளுக்கு ஏற்ற பணிகளையும் செய்வார். இவ்வாறு அந்த அரசாணையில் பிரதீப் யாதவ் தெரிவித்துள்ளார்.
சென்னை, பள்ளிக் கல்வித் துறையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள கமிஷனருக்கு அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.தமிழக பள்ளிக் கல்வித் துறையில் புதிதாக கமிஷனர் பதவி உருவாக்கப்பட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி சிகி தாமஸ் வைத்யன் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான அதிகாரங்களை வரையறுத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.அதன்படி கமிஷனராக இருப்பவர் பள்ளிக் கல்வித் துறை இயக்குனரகம் தொடக்கக் கல்வி இயக்குனரகம் மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் அரசு தேர்வு இயக்குனரகம் செயல்பாடுகளை மேற்பார்வையிடுவார்.பள்ளிகளில் ஆய்வு நடத்தி பள்ளிக் கல்வி தரத்தை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்வார். அரசு வழிகாட்டி விதிமுறைகளை செயல்படுத்துவார். திட்டங்கள் செயல்படுத்தப்படுவதை மேற்பார்வையிடுவார். அவ்வப்போது அரசு அளிக்கும் உத்தரவின்படி செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U