👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் முதற்கட்டமாக 90 ஆயிரம் ஸ்மார்ட் போர்டுகள் பொருத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக ₹400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் போர்டுகள் பொருத்தும் திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை கொண்டு வந்துள்ளது. இதனால் கரும் பலகைகளின் பயன்பாடு பெரும்பாலும் குறைக்கப்பட்டு ஸ்மார்ட் போர்டுகள் மூலம் மாணவர்களுக்கு கற்பிக்க முடியும் என்று பள்ளிக்கல்வித்துறை நம்புகிறது. கடந்த பல ஆண்டுகளாக பள்ளிகளில் கரும்பலகைகள்தான் வகுப்பறைகளை ஆக்கிரமித்து வந்தன. ஆனால், அவற்றை நிறம் மாறாமல் பராமரிப்பதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன.
அதைத் தொடர்ந்து சிமென்ட் சுவர்கள் அமைத்து அதில் கருப்பு நிற பெயின்ட் அடித்து அதையும் கரும்பலகை போல பயன்படுத்தி வந்தனர். இவற்றையும் பராமரிப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதனால் பெரும்பாலான பள்ளிகளில் கரும்பலகைகள் இருந்தும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தொடக்க கல்வித்துறை, பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் அனைத்து பாடங்களுக்கும் சுமார் 2 லட்சம் முதல் 4 லட்சம் ஆசிரியர்கள் வரை வகுப்பறைகளில் கரும்பலகையை பயன்படுத்த வேண்டிய நிலையில் உள்ளனர். நாள்தோறும் இவர்கள் பயன்படுத்தும் கரும்பலகை நீண்ட காலத்துக்கு பயன் தராமல் போகின்றன. வளர்ந்து வரும் தகவல் மற்றும் தொழில்நுட்பங்களை பள்ளிகளில் வகுப்பறைகளில் புகுத்தவும் பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
அதன் ஒரு அம்சமாக, 6029 அரசு உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ஏற்படுத்த அரசு முயற்சி எடுத்து வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஒரு உயர்நிலைப் பள்ளிக்கு 10 கணினிகளும், ஒரு மேனிலைப் பள்ளிக்கு 20 கணினிகளும் அதன் இணைப்புகள், உபகரணங்கள், கம்பி வழி இணைய தொடர்பும் வழங்கப்பட உள்ளன. இந்த திட்டத்துக்காக ₹520 கோடி வரை நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல, திறன் வகுப்பறைகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் கரும்பலகைக்கு பதிலாக ஸ்மார்ட் போர்டுகள் வகுப்பறைகளில் பொருத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, 90 ஆயிரம் ஸ்மார்ட் போர்டுகள் வாங்குவதற்கு பள்ளிக் கல்வித்துறை முயற்சிகள் எடுத்து வருகிறது. இந்த திட்டத்துக்காக ₹400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தம் எத்தனை பள்ளிகளுக்கு இந்த ஸ்மார்ட் போர்டுகள் பொருத்தப்பட உள்ளது, எப்படி இந்த போர்டுகளை வாங்க உள்ளனர் என்பன போன்ற விவரங்கள் இன்னும் முடிவாகவில்லை. இருப்பினும், விரைவில் 90 ஆயிரம் போர்டுகள் முதற்கட்டமாக கொள்முதல் செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U