👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'ஜல்சக்தி அபியான்' திட்டத்தில் மாணவர்களும் பங்கேற்க ஊக்குவிக்க வேண்டும் என பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ சார்பில் 90-ஆம் ஆண்டு விழா புதுதில்லியில் நடைபெற்றது. இதில், சிபி எஸ்இ பள்ளிகளில், புதியதிட்டங்களை அமல்படுத்துவது, கல்வி தரத்தை முன்னேற்றுவது, தேர்வு முறைகளில் மாற்றம் ஏற்படுத்து வது குறித்து, விரிவாக விவாதிக்கப்பட்டது. சிபிஎஸ்இ தலைவர் அனிதா கர்வால் தலைமையில், கருத்தரங்கம் நடந்தது. இதைய டுத்து, பல்வேறு முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டு அவை பள்ளிகளுக்கு சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளன.
அனைத்து பள்ளிகளிலும், நீர் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய் யப் பட்டுள்ளது.ஒவ்வொரு மாணவரும், பள்ளியிலும், வீட்டி லுமாக வீணாகும் நீரை கட்டுப்படுத்தி, தினமும், 1 லிட்டராவது சேமிக்க வேண்டும். தண்ணீர் குறித்த ஆய்வுகளை பள்ளிகளில் அதிகப்படுத்த வேண்டும். சிபிஎஸ்இ பள்ளிகளில், தண்ணீர் சிக் கனத்தை மேற்கொள்ள வேண்டும் என, சுற்றறிக்கையில் கூறப்பட் டுள்ளது. மாணவர்களுக்கு, கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுக்கான பயிற் சிகளை வழங்க வேண்டும்; மாணவர்களின் கணித திறனை மேம் படுத்த வேண்டும்; செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப திறனை மாணவர்களிடம் வளர்க்க வேண்டும் என்றும் இந்த கருத்தரங்கில் முடிவுசெய்யப்பட்டது.
இது குறித்து, சிபிஎஸ்இ அதிகாரிகள் கூறுகையில், மத்திய அர சின்'ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ்பள்ளிகளும் மாணவர்க ளும் பங்கேற்க ஊக்குவிக்கும் வகையில் சிபிஎஸ்இபள்ளிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தனித்தனியாக சிறப்பு சூழல் குழுக்கள் அமைக்கப் பட்டு அவை முறையாக பராமரிக்கப்பட்டு வலுப்படுத்த வேண் டும் என பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், தொடக்கப்பள்ளி முதல் பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள் வரை அனைவரும் பங்கு கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கல்வியோடு சேர்த்து இது போன்ற சமூக நலன் சார்ந்த பணிகளிலும் மாணவர்களை ஈடுபடுத்த வேண்டும் என சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் தண்ணீர் பஞ்சம் இல்லா பள்ளி கள் உருவாக்க வேண்டும் என்பதே குறிக்கோள். இதை மாணவர் கள் கண்டிப்பாக உணர்ந்து செயல்படுவார்கள் என நம்புகிறோம். சூழலியல் குழுக்கள் மூலம் சுற்றுச்சூழல் மட்டுமல்லாது பருவ நிலை மாற்றம், தண்ணீர் சேமிப்பு ஆகியவற்றைக் குறித்தும் இனி கற்கத் தொடங்குவார்கள் என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.