உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பட்டய வகுப்புகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, November 15, 2019

உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பட்டய வகுப்புகள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சென்னையில் உள்ள, உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில், ஓராண்டு கல்வெட்டியல் மற்றும் தொல்லியல், அகழாய்வுக்கான பட்டய வகுப்புகள், 2020 ஜனவரியில் துவங்க உள்ளன. இவ்வகுப்பில், கல்வெட்டியல், தொல்லியல், தமிழக வரலாறு, பண்பாடு, கலை, இலக்கியம் குறித்தும், கல்வெட்டு படியெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல் குறித்தும், பயிற்சி அளிக்கப்படும்.சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் வகுப்புகள் நடக்கும். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை, www.ulakaththamizh.in என்ற இணையதளத்தில், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பயிற்சியில் சேர, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சி கட்டணம், 2,500 ரூபாய். வயது வரம்பு கிடையாது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, டிசம்பர், 20க்குள் சமர்பிக்க வேண்டும்.
சென்னை, தரமணியில் செயல்பட்டு வரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 2020-2021-ஆம் ஆண்டுக்கான ஓராண்டு கல்வெட்டியல் மற்றும் தொல்லியல், அகழாய்வுக்கான பட்டய வகுப்புகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட உள்ளன. இந்த வகுப்பில் கல்வெட்டியல், தொல்லியல், தமிழக வரலாறு, பண்பாடு, கலை, இலக்கியம் குறித்து அறிந்து கொள்வதற்கும், கல்வெட்டுப் படியெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்தலுக்கான பயிற்சியும் அளிக்கப்படும். ஆா்வமுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம். இந்தப் பட்டயப் படிப்பு சனி, ஞாயிறுஆகிய விடுமுறை நாள்களில் ஓராண்டுகாலம் நடத்தப்படும்.
இந்தப் பட்டய படிப்புக்கான விண்ணப்பத்தை நிறுவன வலைதளத்தில் (‌w‌w‌w.‌u‌l​a‌k​a‌t‌h‌t‌h​a‌m‌i‌z‌h.‌i‌n) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்தப் பயிற்சிக்கான கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சிக்கான சோ்க்கைக் கட்டணம் ரூ.2,500 ஆகும். வயது வரம்பு கிடையாது. பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் டிச.20-ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். இதற்கான வகுப்புகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்படும். இது குறித்து மேலும் தகவல் பெற 044-22542992, 95000 12272 என்ற தொலைபேசி எண்களில் தொடா்புகொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews