Search This Blog
Sunday, November 24, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
'எமிஸ்' இணையதளத்தில் மாணவர்களின் பெயர், பிறந்ததேதி, மதம், கற்பித்தல் மொழிக்கான விபரங்கள் உள்ளிட்டவற்றை தமிழிலேயே பதிவேற்றம் செய்வது கட்டாயம்'' என பள்ளிக்கல்வித்துறை இயக்குனரம் உத்தர விட்டுள்ளது.'எமிஸ்' இணைய சர்வரில் தற்போது தலைமை ஆசிரியர்கள் 2020ல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விபரங்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர். அதில் ஆதார் கார்டு விபரங்கள் இருப்பது கட்டாயம். பெயர், பிறந்ததேதி, மதம், கற்பித்தல் மொழி இதர விபரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இன்ஷியல் ஒரு இடைவெளி விட்டு பெயரை தமிழில் குறிப்பிட வேண்டும். அதிக பட்சம் 54 எழுத்துக்களுக்குள் பெயர் விபரங்கள் பதிவிட வேண்டும்.நவ.,29க்குள் தலைமை ஆசிரியர்கள், பிழைத் திருத்தங்களை முடித்திருக்க வேண்டும். குறிப்பாக ஆதார் கார்டும், பதிவேற்ற விபரங்களும் ஒன்றாக இருக்கும்படி பார்த்துக் கொள்வது மிக அவசியம். இதனை கடைபிடிக்க இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது என, தேனி முதன்மை கல்வி அலுவலர் ரேணுகாதேவி தெரிவித்தார்.
பத்தாம் வகுப்பு பொது தேர்வில் பங்கேற்க உள்ள மாணவர்களின் பட்டியலில், பெயர் விபரங்களை தவறின்றி, தெளிவாக பதிவு செய்யும்படி, பள்ளிகளுக்கு அரசு தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, அரசு தேர்வு துறை, நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:பத்தாம் வகுப்பு பொது தேர்வு தொடர்பாக, பெயர் பட்டியல் தயாரிக்க, அரசு தேர்வு துறை சார்பில், உறுதிமொழி படிவம் வழங்கப் பட்டுள்ளது. இந்த படிவத்தில், தமிழில், 45 எழுத்துக்கள், ஆங்கிலத்தில், 34 எழுத்துக்கள் எழுதும் வகையில், இடம் தரப்பட்டுள்ளது. அதற்கு மேலும் எழுத்துக்களை பதிவு செய்ய, 'எமிஸ்' இணையதளத்தில் இட வசதி செய்யப் பட்டுள்ளது. எனவே, தவறின்றி பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
EMIS இணையதள பதிவேற்றத்தில் புதிய நடைமுறை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.