Search This Blog
Saturday, November 30, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
CLICK HERE TO WATCH THE VIDEO
ஆங்கிலத்தில் சில வரிகள் கூட படிக்கத் தெரியாமல் பள்ளி ஒன்றில் ஆங்கில ஆசிரியை பணியாற்றி வந்தது மாவட்ட நீதிபதியால் கண்டுபிடிக்கப்பட்டது.
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னவ் மாவட்டத்தின் சிகந்தர்பூர் சரௌஸி அரசுப் பள்ளியில் அம்மாவட்ட நீதிபதி தேவேந்திர குமார் பாண்டே, யாரும் எதிர்பார்க்காத நிலையில், திடீரென கடந்த 28-ஆம் தேதி ஆய்வு நடத்தினர். மேலும் அங்கிருந்த மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது, அங்கிருந்த ஆங்கில ஆசிரியையிடம் 8-ஆம் வகுப்புக்கு ஆங்கிலப் புத்தகத்தை அளித்து வாசிக்க சொன்னார். ஆனால், சில வரிகளைக் கூட வாசிக்க இயலாமல் அந்த ஆசிரியை திணறினார். இதனால் கோபமடைந்த நீதிபதி, அங்கிருந்த கல்வி அதிகாரிகளிடம் கூறியதாவது,
CLICK HERE TO WATCH THE VIDEO
ஒரு ஆங்கில ஆசிரியையாக இருந்துகொண்டு ஆங்கில மொழியை வாசிக்க தெரியவில்லை. எனவே அவர் உடனடியாக இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்றார். மேலும் விளக்கமளிக்க வந்த ஆசிரியையை மறுத்து, எதுவாக இருந்தால் என்ன? நீங்கள் ஒரு பட்டதாரி. நான் உங்களிடம் அந்த வரிகளுக்கான அர்த்தத்தை விளக்குமாறோ அல்லது மொழியாக்கம் செய்யுமாறும் கூறவில்லை. அந்த வரிகளை வாசித்தால் போதும் என்று தான் கூறினேன் எனக் கோபமாகச் சாடினார்.
வடமாநிலங்களைச் சேர்ந்த பல ஆசிரியர்களின் ஆங்கிலப் புலமை தொடர்பான விடியோப் பதிவுகள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி கடும் விமர்சனங்களை சந்தித்து வருவது நினைவுகூரத்தக்கது.
CLICK HERE TO WATCH THE VIDEO
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Home
ENGLISH
TEACHERS
ஆங்கிலம் தெரியாத 'ஆங்கில ஆசிரியை': கையும்-களவுமாக பிடித்த மாவட்ட நீதிபதி - (விடியோ)
ஆங்கிலம் தெரியாத 'ஆங்கில ஆசிரியை': கையும்-களவுமாக பிடித்த மாவட்ட நீதிபதி - (விடியோ)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.