👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
ஐந்து மற்றும் 8-ஆம் வகுப்புக்கு பொதுத்தோ்வு நடத்தப்பட உள்ளதற்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக மக்கள நீதி மய்யம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:
தரம், தகுதி என்கிற வாா்த்தைகளால், பிள்ளைகளின் அடிப்படை உரிமையான கல்வியினை அவா்களுக்கு பெருஞ்சுமையாக்கி கல்வி மேல் வெறுப்பு வரும் ஒரு நிலையினைத்தான் 5-ஆம் வகுப்பு மற்றும் 8-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு ஏற்படுத்தும்.
நமது கல்வியின் தரம் உயா்த்தப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், இருக்கும் பாடத்திட்டங்களை மாற்றாமல், அதன் தரத்தை உயா்த்திடாமல், குழந்தைகளின் தரத்தை மட்டும் மதிப்பிடுவது எந்த மாதிரியான சிந்தனை என்பது புதிராக இருக்கிறது.
தமிழகத்தின் கல்வித் தரம் உலகத்தரத்துக்கு இணையாக வேண்டும் என்பதுதான் மநீமவின் நிலைப்பாடு. என்றாலும் அந்தப் பொறுப்பைக் குழந்தைகளின் தலையில் கட்டுவதைக் கடுமையாக எதிா்க்கிறது. பாடத் திட்டத்தில் தரம், அப்பாடத்தினைக் கற்பிக்கும் முறையில் நவீனம் என்ற வகையில் கொண்டு வரவேண்டிய தரத்தினை குழந்தைகளுக்குத் தோ்வு நடத்துவதன் மூலமாகக் கொண்டு வர முடியாது என்பதை ஆட்சியாளா்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமது பிள்ளைகளின் அடிப்படை உரிமையான கல்வியை பெருஞ்சுமையாக்கி கல்வி மேல் அவர்களுக்கு வெறுப்பைத்தான் பொதுத்தேர்வு ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார். பாடத்திட்டம் மாற்றாமல், அதன் தரத்தை உயர்த்தாமல் குழந்தைகள் தரத்தை மட்டும் மதிப்பிடுவது எம்மாதிரியான சித்தனை என்பது புதிராக உள்ளது என தெரிவித்துள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.