வங்கியில் டெபாசிட்: எந்த வங்கியில் எவ்வளவு வட்டி.. இதோ தெரிந்து கொள்ளுங்கள்..! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, November 24, 2019

Comments:0

வங்கியில் டெபாசிட்: எந்த வங்கியில் எவ்வளவு வட்டி.. இதோ தெரிந்து கொள்ளுங்கள்..!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
என்னதான் பல வகையான முதலீடுகள் குறித்தான அறிக்கைகள், விழிப்புணர்வுகள் வந்து கொண்டிருந்தாலும், இன்றளவிலும் மக்களின் பெரும்பான்மையான நம்பிக்கை, முதல் தேர்வு என்பது வங்கிகளில் செய்யப்படும் வைப்பு நிதியாகத் தான் இருக்கிறது.
சரி வைப்பு என்றால் எவ்வளவு வட்டி என தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படி எனில் முதலில் இதை படியுங்கள். இந்த வகையில் வணிக வங்கிகளுடன் ஒப்பிடுகையில் சிறு நிதி வங்கிகள் நிலையான வைப்பு நிதிகளுக்கு அதிக அளவிலான வட்டி விகிதங்கள் தரப்படுவதாக கூறப்படுகிறது.
வட்டி விகிதம் எப்படி? இதில் ஃபின்கேர் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி பொது வாடிக்கையாளர்களுக்கு தேர்தெடுக்கப்பட்ட முதிர்வுகளுக்கு 9 சதவிகித வட்டி விகிதத்தை வழங்குகிறது. அதே நேரத்தில் சூர்யோதே ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி மற்றும் உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில் முறையே 8.5 சதவிகிதம் மற்றும் 8.75 சதவிகித வட்டி விகிதங்களை வழங்குகின்றன.
ஃபின்கேர் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி வட்டி விகிதம் எப்படி?
ஃபின்கேர் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில் செய்யப்படும் டெபாசிட் தொகையானது 7 - 90 நாட்களுக்கு வட்டி விகிதம் 4 சதவிகிதமாகும். இதே 91 - 180 நாட்களுக்கான வைப்பு நிதிக்கு 6 சதவிகித வட்டியும், இதே 181 - 364 நாட்களுக்கு 7 சதவிகித வட்டி விகிதமும் வழங்கப்படும். இதே 12 மாதம் முதல் 15 மாதம் வரையிலும், இதே 1 நாள் முதல் 18 மாதம் வரையிலும், இந்த வங்கி முறையே 8 - 8.25 சதவிகித வட்டியும் தருகிறது.
அதிகபட்ச வட்டி
இதே 18 மாதம் 1 நாள் முதல் 21 மாதம் வரையில் 8.5 சதவிகிதமும், இதே 21 மாதம் 1 நாள் முதல் 24 மாதங்களுக்கு வட்டி விகிதம் 8.75 சதவிகிதமும் தருகிறது. இதே இந்த ஃபின்கேர் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி அதிகபட்சமாக 9 சதவிகித வட்டியை 24 மாதம் 1 நாள் முதல் 36 மாதங்களுக்கு வழங்குகிறது. இதே 3 வருடம் 1 நாள் முதல் 5 வருடம் மற்றும் 5 வருடம் 1 நாள் முதல் 7 வருடங்களுக்கு முறையே 8 சதவிகிதம் மற்றும் 7 சதவிகிதம் வட்டியை கொடுத்து வருகிறது.
மொத்த வட்டி விகிதம் - ஃபின்கேர் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
7 முதல் 45 நாட்களுக்கு 4% -வட்டியும்
46 நாள் முதல் 90 நாட்களுக்கு 4%
91 நாள் முதல் 180 நாட்களுக்கு 6%
181 நாள் முதல் 364 நாட்களுக்கு 7%
12 மாதம் முதல் 15 மாதங்கள் - 8%
15 மாதம் 1 நாள் முதல் 18 மாதம் வரை - 8.25%
21 மாதம் 1 நாள் முதல் 24 மாதம் - 8.75%
24 மாதம் 1 நாள் முதல் 36 மாதம் - 9%
3 வருடம் 1 நாள் முதல் 5 வருடம் - 8%
5 வருடம் 1 நாள் முதல் 7 வருடம் - 7%
மூத்த குடிமக்களுக்கு எவ்வளவு- ஃபின்கேர் ஸ்மால் ஃபைனான்ஸ்
இதே மூத்த குடிமக்களுக்கு, பொதுவான வாடிக்கையாளர்களுக்கு மேலே மற்றும் அதற்கு மேல் 50 அடிப்படை புள்ளிகளைப் பெறுவார்கள். இந்த வைப்பு நிதி 7 நாட்கள் முதல் 7 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் வைப்பு நிதிக்கு 4.50 முதல் 9.50 சதவிகிதம் வரை வட்டி விகிதத்தைப் பெறும்.
உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் வட்டி எவ்வளவு?
7 நாள் முதல் 15 நாட்கள் வரை - 4.75%
16 நாட்கள் முதல் 28 நாட்கள் வரை 4.75%
29 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை 4.75%
46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை 5.50%
91 நாட்கள் முதல் 180 நாட்கள் வரை 6.75%
181 நாட்கள் முதல் 270 நாட்கள் வரை 7%
1 வருடம் முதல் 455 நாட்கள் வரை 7.25%
456 நாட்கள் முதல் 2 வருடங்களுக்குள் 8.505
2 வருடம் முதல் 5 வருடங்களுக்குள் 8%
5 வருடத்திற்கு 8.35%
இதே ஐந்து வருடம் முதல் 10 வருடத்திற்கு 7.75%
உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்- மூத்த குடிமக்கள் வட்டி
இதே மூத்த குடிமக்களுக்கு இந்த வட்டி விகிதமானது, பொது வாடிக்கையாளர்களின் வட்டி விகிதத்தில் இருந்து, 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை 5.25% முதல் 9% வரை வட்டி பெறுவார்கள் என்றும் இன்டஹ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யோதயாத் ஸ்மால் ஃபைனான்ஸில் வட்டி எவ்வளவு?
சூர்யோதயாத் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியை பொறுத்தவரையில் 7 முதல் 14 நாட்களுக்கு 4% வட்டியும்,
15 நாட்கள் முதல் 45 நாட்களுக்கு 4% வட்டியும்,
46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை 5%
91 நாட்கள் முதல் 6 மாதம் வரை 5.50%
6 மாதங்களுக்கு மேல் 9 மாதம் வரை 7.50%
9 மாதம் முதல் 1 வருடத்திற்கும் குறைவாக 7.75%
1 வருடம் 6 மாதம் முதல் 2 வருடம் - 8.50%
2 வருடத்திற்கு மேல் 3 வருடத்திற்குள் 8.75% வட்டியும்
இதே 3 வருடம் முதல் 5 வருடத்திற்குள் 8%
5 வருடத்திற்கு 8.25%
ஐந்து வருடத்திற்கு மேல் - 10 வருடத்திற்கு 7.25%
சூர்யோதயாத் ஸ்மால் ஃபைனான்ஸ்- மூத்த குடிமக்களுக்கு எப்படி? இதே இந்த வங்கியில் மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம் 4.50% முதல் 9.25% வரையில், 7 நாட்கள் முதல் 10 வருடம் வரையிலான வைப்பு நிதிக்கு வட்டியாகும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews