அண்ணா பல்கலை பெறாவிட்டால் சீர்மிகு தகுதி வேறுபல்கலைக்கு செல்லும் : குழு தலைவர் தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, November 13, 2019

அண்ணா பல்கலை பெறாவிட்டால் சீர்மிகு தகுதி வேறுபல்கலைக்கு செல்லும் : குழு தலைவர் தகவல்

??Join Our??WhatsApp??Group??Click Here ??Join Our??Telegram??Group??Click Here??Join Our??Facebook??Page??Click Here??Join Our??Twitter??Page??Click HereAdd 9361194452 To Ur Groups
மத்திய அரசின் உயர்கல்வித் தகுதியை பெறுவதற்கான கடிதத்துக்கு அண்ணா பல்கலைக்கழகம் ஒப்புதல் அளிக்காவிட்டால், வேறு பல்கலைக்கழகத்துக்கு சீர்மிகு பல்கலை அந்தஸ்து வழங்க வாய்ப்புள்ளதாக சீர் மிகு பல்கலைக்கழக அதிகாரமளித்தல் குழுவின் தலைவர் கோபால்சாமி தெரிவித்தார். இதுகுறித்து சீர்மிகு பல்கலைக்கழக அதிகாரமளித்தல் குழுவின் தலைவர் கோபால்சாமி கூறியதாவது: பல்கலைக்கழக மானியக் குழுவின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு வெளிநாட்டு பேராசிரியர்கள் நியமனம், வெளிநாட்டு மாணவர் சேர்க்கை, புதிய பாடத்திட்டம் போன்ற அனைத்துக்கும் பல்கலைக்கழக மானியக் குழுவிடம் அனுமதி பெற வேண்டும். இதை தவிர்க்கும் வகையில், நமது மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களை உலக தரத்துக்கு உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டது. எனவே, இந்தியாவில் 20 பல்கலைக்கழகங்களுக்கு சீர்மிகு பல்கலைக்கழக அந்தஸ்து பெறத் தகுதியுள்ள பல்கலைக்கழகங்கள் பல்கலைக்கழக மானியக் குழுவின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயல்படத் தேவையில்லை. ஆனால், சீர்மிகு பல்கலைக்கழகத்தின் அதிகாரமளித்தல் குழுவின் ஆய்வின் அடிப்படையில் பல்கலைக்கழகங்கள் செயல்பட முடியும்.
10 ஆண்டுக்குள் உலக தரவரிசைப் பட்டியலில் 500 இடங்களுக்குள் இந்திய பல்கலைக்கழகங்கள் வரவேண்டும் என்ற அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக தேர்வாகும் பல்கலைக்கழகங்களுக்கு சில சுதந்திரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்தியாவில் 10 அரசு மற்றும் 10 தனியார் பல்கலைக்கழகங்களுக்கு சீர்மிகு பல்கலைக்கழக அந்தஸ்து அளிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 30 பல்கலைக்கழகங்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளன. அதில் 20 பல்கலைக்கழகங்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு சீர்மிகு பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்படும். தமிழகத்தை பொறுத்தவரையில் சென்னை ஐஐடி, வேலூர் விஐடி பல்கலைக் கழகம் ஆகியவை சீர்மிகு பல்கலைக்கழக அந்தஸ்தை பெற்றுள்ளன. தற்போது சென்னை அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதல் கடிதம் அண்ணா பல்கலைக்கழகம் இன்னும் வழங்கவில்லை. இனிமேலும் தாமதம் செய்யாமல் கடிதம் அளிக்க வேண்டும். இல்லை என்றால் பட்டியலில் அடுத்துள்ள பல்கலைக்கழகத்தை தேர்வு செய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு கோபால்சாமி தெரிவித்தார்.
??Join Our??Facebook??Page??Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews