Search This Blog
Saturday, November 02, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கேரளத்தில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களைப் பார்வையிட, கோவை பள்ளி மாணவர்கள் 120 பேர் களப் பயணம் சென்றனர்.
ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்டத்தின் கீழ் அரசுஉயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், வெளிமாநிலங்களுக்கு நேரடி களப்பயணத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர். இதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள 4 கல்வி மாவட்டங்களில் தலா 30 பேர் வீதம், 120 பேர் களப் பயணம் செல்லதேர்ந்தெடுக்கப்பட்டு, கேரள மாநிலத்துக்கு களப் பயணம் சென்றுள்ளனர். அவர்களை கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆர்.முருகன்தலைமையில், எஸ்எஸ்குளம் மாவட்ட கல்வி அலுவலர் ஆர்.கீதா, ஏடிபிசி கே.கண்ணன்ஆகிய அதிகாரிகள் வழியனுப்பிவைத்தனர்.
இது குறித்துபள்ளிக்கல்வித் துறையினர்கூறும்போது, ‘‘மத்திய அரசின் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்துடன் (ஐஆர்சிடிசி) இணைந்து,கேரள மாநிலம் திருவனந்த புரத்துக்கு களப்பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோவை வருவாய் மாவட்டத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ள, 120 மாணவர்கள் அங்குள்ளஉயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் அறிவியல் மையங்களைப் பார்வையிடுகின்றனர். அரசு பள்ளிகளில் 9-ம் வகுப்புபடிக்கும் மாணவர்கள் மட்டுமே களப் பயணத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். பயணம்செல்லும் இடங்கள் குறித்து முழுவிவரங்களை, மாணவர்களின் பெற்றோருக்கு தெரிவித்து, அவர்களின் அனுமதி பெறப்பட்டுள்ளது. மாணவர்கள் சீருடையில் இருப்பார்கள். சோப்பு,பற்பசை, கண்ணாடி, டவல் ஆகியவை மாணவர்களுக்கு வழங்கப்படும். 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் 120 மாணவர்களுக்கு 6ஆசிரியர்கள் உடன் செல்கின்றனர்" என்றனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
கேரள உயர்கல்வி நிறுவனங்களுக்கு பள்ளி மாணவர்கள் 120 பேர் களப்பயணம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.