உலக வரலாற்றில் இன்று - நவம்பர் 11 - தேசிய கல்வி நாள் (National Education Day) - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, November 11, 2019

உலக வரலாற்றில் இன்று - நவம்பர் 11 - தேசிய கல்வி நாள் (National Education Day)

??Join Our??WhatsApp??Group??Click Here ??Join Our??Telegram??Group??Click Here??Join Our??Facebook??Page??Click Here??Join Our??Twitter??Page??Click HereAdd 9361194452 To Ur Groups
நிகழ்வுகள்
1100 – இங்கிலாந்து மன்னர் முதலாம் என்றி இசுக்காட்லாந்தின் மன்னர் மூன்றாம் மால்க்கத்தின் மகள் மெட்டில்டாவை திருமணம் செய்தார்.
1028 – பைசாந்தியப் பேரரசர் எட்டாம் கான்ஸ்டன்டைன் 66 கால ஆட்சியின் பின்னர் இறந்தார்.
1500 – பிரான்சின் பன்னிரண்டாம் லூயி மன்னனுக்கும் அராகனின் இரண்டாம் பேர்டினண்ட் மன்னனுக்கும் இடையில் நாபொலி பேரரசைத் தமக்கிடையே பிரிக்க உடன்பாடு எட்டப்பட்டது.
1572 – டைக்கோ பிராகி எசுஎன் 1572 என்ற மீயொளிர் விண்மீன் வெடிப்பை அவதானித்தார்.
1673 – உக்ரைனின் கோட்டின் என்ற இடத்தில் போலந்து-இலித்துவேனியப் படைகள் உதுமானிய இராணுவத்தைத் தோற்கடித்தன.
1675 – குரு கோவிந்த் சிங் சீக்கியர்களின் 10வது குருவாகப் பொறுப்பேற்றார்.
1675 – கோட்பிரீட் லைப்னிட்ஸ் y=f(x) என்ற செயலி ஒன்றின் வரைபின் பரப்பைக் காணுவதற்கு முதன் முறையாக தொகையீட்டு நுண்கணிதத்தைப் பயன்படுத்தினார்.
1778 – அமெரிக்கப் புரட்சிப் போர்: மத்திய நியூயார்க்கில் செனெக்கா இந்தியர்கள் குடியேறிகள், படையினர் உட்பட 40 பேரைக் கொன்றனர்.
1813 – பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: கிறிசுலர் பண்ணையில் இடம்பெற்ற போரில், பிரித்தானிய, கனடியப் படைகள் அமெரிக்கப் படைகளைத் தோற்கடித்தன.
1831 – அடிமைப் புரட்சியில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்பட்ட நாட் டர்னர் வர்ஜீனியாவில் தூக்கிலிடப்பட்டார்.
1865 – டீஸ்டா ஆற்றின் கிழக்குப் பகுதிகளை பூட்டான் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்திடம் ஒப்படைத்தது.
1869 – பழங்குடியினரின் சம்பளம், வேலை, எங்கு அவர்களும் அவர்களது பிள்ளைகளும் எங்கு வசிக்க வேண்டும் எனத் தீர்மானிக்கும் விக்டோரிய பழங்குடிகள் பாதுகாப்புச் சட்டம் ஆத்திரேலியாவில் கொண்டு வரப்பட்டது. இது பின்னர் திருடப்பட்ட தலைமுறைகளுக்கு வழிவகுத்தது.
1887 – ஹேமார்க்கெட் படுகொலை: ஐக்கிய அமெரிக்காவின் சிகாகோ நகரில் தொழிலாளர் தலைவர்கள் மூவர் தூக்கிலிடப்பட்டனர்.
1889 – வாசிங்டன் அமெரிக்காவின் 42வது மாநிலமாக இணைக்கப்பட்டது.
1909 – அவாயில் பேர்ள் துறைமுகத்தில் அமெரிக்கக் கடற்படைத் தளம் அமைக்கப்பட்டது.
1918 – பிரான்சில் "கொம்பியேன் காடு" என்ற இடத்தில் தொடருந்துப் பெட்டி ஒன்றில் செருமனிக்கும் கூட்டுப் படைகளுக்கும் இடையில் போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. முதலாம் உலகப் போர் 11:00 மணிக்கு முடிவுக்கு வந்தது.
1918 – யோசப் பித்சூத்ஸ்கி வார்சாவுக்குத் திரும்பி போலந்தின் உயர் இராணுவப் பதவியைப் பெற்றான். போலந்து விடுதலை பெற்றது.
1919 – இலங்கைத் தேசிய காங்கிரஸ் அமைக்கப்பட்டது.
1923 – தோல்வியில் முடிந்த புரட்சியை அடுத்து இட்லர் மியூனிக் நகரில் கைது செய்யப்பட்டார்.
1930 – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், லியோ சிலார்ட் ஆகியோர் தமது கண்டுபிடிப்பான ஐன்ஸ்டைன் குளிர்சாதனப்பெட்டிக்கான காப்புரிமத்தைப் பெற்றனர்.
1933 – யாழ் பொது நூல் நிலையம் திறக்கப்பட்டது.
1940 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவின் அரச கடற்படை முதல் தடவையாக போர்க் கப்பல்களுக்கிடையேயான தாக்குதலை மேற்கொண்டது.
1960 – தெற்கு வியட்நாம் அரசுத்தலைவர் நியோ டின் டியெம் மீதான இராணுவப் புரட்சி தோல்வியில் முடிந்தது.
1965 – ரொடீசியாவில் (இன்றைய சிம்பாப்வே), இயன் சிமித் தலைமையிலான வெள்ளையின சிறுபான்மை அரசு விடுதலையை அறிவித்தது.
1966 – நாசா ஜெமினி 12 கப்பலை விண்ணுக்கு அனுப்பியது.
1967 – வியட்நாம் போர்: கம்போடியாவில் மூன்று அமெரிக்கப் போர்க் கைதிகள் வியட் கொங் படைகளால் விடுவிக்கப்பட்டனர்.
1968 – மாலைதீவுகளில் இரண்டாவது குடியரசு அறிவிக்கப்பட்டது.
1975 – ஆத்திரேலியாவில் ஆளுநர் சர் ஜோன் கெர் கஃப் விட்லமின் அரசைக் கலைத்து மால்கம் பிரேசரை இடைக்காலப் பிரதமராக அறிவித்தார்.
1975 – அங்கோலா போர்த்துகலிடம் இருந்து விடுதலை பெற்றது.
1981 – அன்டிகுவா பர்புடா ஐக்கிய நாடுகள் அவையின் இணைந்தது.
1992 – இங்கிலாந்து திருச்சபை பெண்களையும் சமயகுருக்களாக சேர்ப்பதற்கு முடிவெடுத்தது.
2000 – ஆஸ்திரியாவில் இழுவை ஊர்தி ஒன்று தீப்பிடித்ததில் 155 பேர் உயிரிழந்தனர்.
2004 – யாசிர் அரஃபாத் இனந்தெரியாத காரணங்களால் உயிரிழந்ததை பலத்தீன விடுதலை இயக்கம் உறுதி செய்தது. மகுமுது அப்பாசு தலைவரானார்.
2012 – மியான்மரில் 6.8 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில், 26 பேர் உயிரிழந்தனர்.
பிறப்புகள்
1821 – பியோதர் தஸ்தயெவ்ஸ்கி, உருசிய எழுத்தாளர் (இ. 1881)
1847 – பிரெட்ரிக் வில்லியம் ஸ்டீவென்ஸ், பிரித்தானியக் கட்டிடக் கலைஞர் (இ. 1900)
1875 – வெசுட்டோ மெல்வின் சுலிப்பர், அமெரிக்க வானியலாளர் (இ. 1969)
1885 – அனுசுயா சாராபாய், இந்தியாவின் பெண்கள் தொழிலாளர் இயக்கத்தின் முன்னோடி (இ. 1972)
1888 – அபுல் கலாம் ஆசாத், இந்திய அரசியல்வாதி (இ. 1958)
1888 – ஆச்சார்ய கிருபளானி, இந்திய அரசியல்வாதி (இ. 1982)
1899 – கி. ஆ. பெ. விசுவநாதம், தமிழறிஞர் (இ. 1994)
1908 – பி. எஸ். பாலிகா, இந்திய எழுத்தாளர், பதிப்பாளர் (இ. 1958)
1909 – எம்பார் எஸ். விஜயராகவாச்சாரியார், இறைக்கதை சொற்பொழிவாளர் (இ. 1991)
1911 – டி. பி. ராஜலட்சுமி, தமிழ்த் திரைப்படத்துறையின் முதல் நடிகை, முதல் பெண் இயக்குநர் (இ. 1964)
1917 – மரகதம் சந்திரசேகர், இந்திய அரசியல்வாதி (இ. 2001)
1921 – எஸ். தட்சிணாமூர்த்தி, தென்னிந்திய இசையமைப்பாளர், பின்னணிப் பாடகர், கருநாடக இசைக் கலைஞர் (இ. 2012)
1922 – கர்ட் வானெகெட், அமெரிக்க எழுத்தாளர் (இ. 2007)
1937 – ப. ஆப்டீன், ஈழத்து எழுத்தாளர்
1937 – இசுரீபன் லூவிசு, கனடிய அரசியல்வாதி
1943 – அனில் காகோட்கர், இந்திய அணு அறிவியலாளர்
1945 – டானியல் ஒர்ட்டேகா, நிக்கராகுவா அரசுத்தலைவர்
1955 – ஜிக்மே சிங்கே வாங்சுக், பூட்டான் மன்னர்
1957 – மிசேல் டி கிரெட்சர், இலங்கை-ஆத்திரேலியப் புதின எழுத்தாளர்
1960 – பீ. எம். புன்னியாமீன், இலங்கை எழுத்தாளர், நூலாசிரியர், வெளியீட்டாளர் (இ. 2016)
1963 – பொன்னம்பலம், தமிழக நடிகர்
1974 – லியோனார்டோ டிகாப்ரியோ, அமெரிக்க நடிகர்
1989 – அசோக் செல்வன், தமிழ்த் திரைப்பட நடிகர்
இறப்புகள்
683 – முதலாம் யசீத், 2-ஆம் கலீபா (பி. 647)
1831 – நாட் டர்னர், அமெரிக்கக் கிளர்ச்சித் தலைவர் (பி. 1800)
1880 – லுக்ரிடியா மோட், அமெரிக்க செயற்பாட்டாளர் (பி. 1793)
1917 – லில்லியுகலானி, அவாய் அரசி (பி. 1838)
1993 – கப்டன் மயூரன், தமிழீழ விடுதலைப் புலிப் போராளி (பி. 1970)
1995 – சுந்தா, தமிழக எழுத்தாளர், கல்கியின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் (பி. 1913)
1999 – சத்தியவாணி முத்து, தமிழக அரசியல்வாதி (பி. 1923)
2004 – யாசிர் அரஃபாத், பாலத்தீனத் தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1929)
2005 – பீட்டர் டிரக்கர், ஆத்திரிய-அமெரிக்க எழுத்தாளர் (பி. 1909)
2016 – கே. சுபாஷ், தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர்
சிறப்பு நாள்
விடுதலை நாள் (அங்கோலா, போர்த்துகலிடம் இருந்து 1975)
குழந்தைகள் நாள் (குரோவாசியா)
நினைவுகூரும் நாள் (ஐக்கிய இராச்சியம், பொதுநலவாய நாடுகள்)
தேசிய கல்வி தினம் (இந்தியா)
குடியரசு நாள் (மாலைத்தீவுகள்)
??Join Our??Facebook??Page??Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews