👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்பதாரர்கள், கல்லூரி வருகைப் பதிவேடு, ஊதியப் பட்டியல் நகல்களுக்குப் பதிலாக மாற்று ஆவணங்களைச் சமர்ப்பிக்கலாம் என தொழில்நுட்ப கல்வி இயக்கநரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 2,331 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஆர்பி அண்மையில் வெளியிட்டது. இதற்கு விண்ணப்பிக்க நவம்பர் 15 கடைசி நாளாகும்.
இதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், முன்னர் பணிபுரிந்த கல்லூரிகளில் பணி அனுபவச் சான்று, கல்லூரி வருகைப் பதிவேடு நகல், ஊதியப்பட்டியல் நகல் ஆகியவற்றைப் பெற்று கல்லூரி கல்வி இயக்குநரகம் அல்லது தொழில்நுட்பக் கல்வி இயக்கநரகத்தில் மேலொப்பம் பெற்று, விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்யவேண்டும்.
இந்த ஆவணங்களை கேட்கும் விண்ணப்பதாரர்களுக்கு கலை - அறிவியல் கல்லூரிகள் அளித்து வரும் நிலையில், பெரும்பாலான பொறியியல் கல்லூரிகள் தர மறுப்பதாக புகார் எழுந்தது. இந்தப் புகார்களைத் தொடர்ந்து, கல்லூரிகளுக்கு கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலகத்தின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதுபோல, தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் கட்டுப்பாட்டு அறையை அமைத்து, இதுதொடர்பான புகார்களுக்கு தீர்வு அளித்து வருகிறது.
இந்த நிலையில், விண்ணப்பிக்க குறைந்த கால அவகாசமே இருப்பதால், இந்த ஆவணங்களுக்குப் பதிலாக மாற்று ஆவணங்களைச் சமர்ப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பு:
பணிபுரிந்த கல்லூரிகளில் ஊதியப் பட்டியல் கிடைக்கப் பெறாத விண்ணப்பதாரர்கள், வங்கியில் ஊதியம் வழங்கப்பட்டதற்கான பட்டியலைப் பெற்று கல்லூரி முதல்வரிடம் சான்றொப்பமிட்டு சமர்ப்பிக்கலாம்.
அதுபோல, வருகைப் பதிவேடுக்குப் பதிலாக உயிரி தொழில்நுட்ப முறை பயன்படுத்தப்பட்டிருந்தால், அதைக் குறிப்பிட்டு கல்லூரி முதல்வர் வழங்கும் வருகைச் சான்றைச் சமர்ப்பிக்கலாம் என புதிய அறிவிப்பில் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.