Search This Blog
Thursday, October 10, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நாடு முழுவதும் உள்ள அனைத்துக் கல்லூரிகளும் ‘நாக்’ (தேசிய ஆய்வு மற்றும் அங்கீகார கவுன்சில்) அங்கீகாரம் பெறுவதை கட்டாயமாக்க யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) திட்டமிட்டுள்ளது.
அதாவது, மத்திய அரசின் அல்லது யுஜிசி நிதி உதவி பெற விரும்பும் கல்லூரிகள் மட்டுமே யுஜிசி சட்டப் பிரிவு 2(எப்) மற்றும் 12(பி) பிரிவுகளின் கீழ் அங்கீகாரம் பெறுவது இதுவரை கட்டாயமாகியிருந்தது. ஆனால், இப்போது இதை அனைத்துக் கல்லூரிகளுக்கும் கட்டாயமாக்க யுஜிசி திட்டமிட்டுள்ளது.
இதற்கான வரைவு வழிகாட்டுதலையும் யுஜிசி இப்போது வெளியிட்டிருக்கிறது.
சட்டப் பிரிவு 2(எப்) மற்றும் 12(பி):
யுஜிசி சட்டம் 1956 பிரிவு 2(எப்) மற்றும் 12(பி) பிரிவு இரண்டும் மத்திய அரசு மற்றும் யுஜிசி போன்ற அமைப்புகளிடமிருந்து நிதி உதவி பெறுவதற்கான சட்டப் பிரிவுகளாகும்.
இதில் பிரிவு 2(எப்) அங்கீகாரம் பெற்றிருப்பதன் மூலம், கருத்தரங்குகள், பயிலரங்குகள் நடத்துவதற்கான நிதியுதவியை மத்திய அரசிடமிருந்தும், யுஜிசி போன்ற அமைப்புகளிடமிருந்தும் பெற முடியும்.
12(பி) பிரிவின் கீழ் அங்கீகாரம் பெற்றிருப்பதன் மூலம், பல்கலைக்கழகம் அல்லது கல்லூரி வளாகத்தில் புதிய கட்டடங்கள், ஆராய்ச்சி மையங்கள் கட்டுவதற்கான நிதியுதவியைப் பெற முடியும்.
மத்திய அரசின் நிதியுதவி பெற விரும்பும் கல்லூரிகள் மட்டுமே, இந்த இரண்டு பிரிவுகளின் கீழ் அங்கீகாரம் பெறுவது இதுவரை கட்டாயமாக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக, தமிழகம் மட்டுமன்றி நாடு முழுவதிலும் பெரும்பாலான கல்லூரிகள் இந்த இரண்டு பிரிவுகளின் கீழ் அங்கீகாரம் பெறாமலே இயங்கி வருகின்றன.
வரைவு வழிகாட்டுதல்:
இந்த நிலையில், உயா் கல்வியின் தரத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை மத்திய அரசும், யுஜிசி-யும் மேற்கொண்டு வருகின்றன. அதில் ஒரு பகுதியாக, யுஜிசி சட்டம் 2(எப்) பிரிவின் கீழ் அங்கீகாரம் பெறுவதை அனைத்துக் கல்லூரிகளுக்கும் கட்டாயமாக்க யுஜிசி திட்டமிட்டிருக்கிறது. இதற்கான, புதிய திருத்தப்பட்ட வரைவு வழிகாட்டுதலை யுஜிசி இப்போது வெளியிட்டிருக்கிறது. கல்வியாளா்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துகளையும் வரவேற்றுள்ளது.
இந்த வரைவு வழிகாட்டுதலின்படி, அனைத்துக் கல்லூரிகளும் சட்டப் பிரிவு 2(எப்) பிரிவின் கீழ் அங்கீகாரம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. மேலும், நிரந்தர இணைப்பு அந்தஸ்து மட்டுமன்றி தற்காலிக இணைப்பு அந்தஸ்து பெற்று இயங்கும் கல்லூரிகளிலும், யுஜிசி வழிகாட்டுதல்கள் முறையாகப் பின்பற்றப்படுவதை அந்தந்தப் பல்கலைக்கழகங்கள் தொடா்ச்சியாக ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும்.
இந்த ஆய்வின்போது குறைபாடுகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட கல்லூரிகள் மீது மாணவா் சோ்க்கைக்குத் தடை உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுப்பது போன்ற பல்வேறு புதிய நடைமுறைகள் இந்த வரைவு வழிகாட்டுதலில் இடம்பெற்றிருக்கின்றன.
நாக் அங்கீகாரம் இனி கட்டாயம்:
இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் தோ்வுக் கட்டுப்பாட்டாளரும், தனியாா் கலை-அறிவியல் கல்லூரி முதல்வருமான திருமகன் கூறியது:
நாடு முழுவதும் உள்ள அனைத்துக் கல்லூரிகளையும், பல்கலைக்கழகங்களையும் கட்டாயம் ‘நாக்’ அங்கீகாரம் பெற வைப்பதையே இந்த வரைவு வழிகாட்டுதலின் அம்சமாக உள்ளது.
ஏனெனில் யுஜிசி சட்டப் பிரிவு 2(எப்) அல்லது 12(பி) பிரிவின்கீழ் அங்கீகாரம் பெற விண்ணப்பிக்கும் கல்லூரிகள் முன்னதாக ‘நாக்’ அங்கீகாரம் பெற்றிருப்பது அவசியம்.
‘நாக்’ அங்கீகாரத்தைப் பொருத்தவரை, ஆசிரியா் - மாணவா் விகிதாசாரம், உள்கட்டமைப்பு வசதிகள், ஆய்வக வசதிகள், ஆய்வுக் கட்டுரை வெளியீடு ஆகியவற்றின் அடிப்படையில் அதிகபட்சமாக ஏ++, ஏ+, ஏ, பி++, பி+, பி போன்ற 6 தர நிா்ணயங்களை நாக் வழங்குகிறது. எனவே, உயா் கல்வித் தரத்தை உயா்த்தும் நோக்கத்தோடு யுஜிசி அறிமுகம் செய்துள்ள இந்த வரைவு வழிகாட்டுதல் வரவேற்புக்குரியது என்றாா் அவா்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
நாக்(NAAC) அங்கீகாரம்: அனைத்துக் கல்லூரிகளுக்கும் கட்டாயமாகிறது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.