Search This Blog
Thursday, October 10, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தனியார் பள்ளிகளில் 1 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு இரண்டாம் பருவ புத்தகம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இதையடுத்து, புத்தகம் வாங்க தனியார் பள்ளி மாணவர்களின் பெற்றோர் டிபிஐ வளாகத்தில் குவிந்துள்ளனர். அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு காலாண்டு தேர்வு முடிந்து தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. கீழ் வகுப்புகளுக்கு முதல் பருவத் தேர்வும், மேல் வகுப்புகளுக்கு காலாண்டுத் தேர்வுகளும் முடிந்துள்ள நிலையில் தற்போது பிளஸ் 1 முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கான இரண்டாம் பருவ புத்தகங்களும், மேல் வகுப்புக்கான இரண்டாம் பகுதி புத்தகங்களும் பள்ளிகளில் இலவசமாக வழங்கப்படுகின்றன. இந்நிலையில், தனியார் பள்ளிகளுக்கான புத்தகங்கள் விலைக்கு விற்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான புத்தகங்களை அந்தந்த பள்ளி நிர்வாகமே பணம் செலுத்தி பெற்று மாணவர்களுக்கு வழங்கி வருகின்றன.
தேவைக்கு ஏற்ப பட்டியல் கொடுத்து தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் வாங்கிக் கொள்ள வேண்டும். ஆனால் இந்த ஆண்டு தனியார் பள்ளிகள் யாரும் புத்தகங்கள் வாங்க பட்டியல் தரவில்லை. அதனால் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இதுவரை பருவ புத்தகங்கள் கிடைக்காமல் தவிக்கின்றனர். ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி காரணமாக கடந்த நான்கு நாட்களாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு தற்போது பள்ளிகள் திறந்த நிலையில் புத்தகங்கள் வாங்குவதற்காக தனியார் பள்ளி மாணவர்களின் பெற்றோர் நேற்று டிபிஐ வளாகத்துக்கு படையெடுத்தனர். இதனால் அங்கு பெரும் நெரிசல் ஏற்பட்டது. அதன் காரணமாக புத்தகம் வாங்க வந்தவர்கள் வரிசையில் நிற்க வைக்கப்பட்டு புத்தகங்கள் வினியோகம் செய்யப்பட்டது. நேற்று மாலை 7 மணி வரை புத்தகம் வினியோகம் நடந்தது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Home
PRIVATE
Textbook
பள்ளிகள் திறந்தும் 2ம் பருவம் புத்தகம் கிடைக்காமல் தனியார் பள்ளி மாணவர்கள் திணறல்
பள்ளிகள் திறந்தும் 2ம் பருவம் புத்தகம் கிடைக்காமல் தனியார் பள்ளி மாணவர்கள் திணறல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.