LIC Assistant Jobs Exam: உதவியாளர் பணியிடத்திற்கான தேர்வு தேதி மாற்றம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, October 13, 2019

1 Comments

LIC Assistant Jobs Exam: உதவியாளர் பணியிடத்திற்கான தேர்வு தேதி மாற்றம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி காப்பீட்டு நிறுவனத்தில் அறிவிக்கப்பட்டிருந்த உதவியாளர் பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வுக்கான தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி காப்பீட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு www.licindia.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டு கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் அக்டோபர் 1 ஆம் தேதி வரையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட போது உதவியாளர் பணிக்கான முதல்நிலை தேர்வு 2019 அக்டோபர் 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது உதவியாளர் பணிக்கான முதல்நிலைத் தேர்வு தேதி அக்டோபர் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு www.licindia.in என்னும் எல்ஐசி-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு செய்வதற்கான செயல்முறையின் மற்ற அனைத்து நிபந்தனைகளில் மாற்றம் இல்லை என்பதை விண்ணப்பத்தாரர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளது. விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு அக்டோபர் 15 ஆம் தேதி வெளியிடப்படும். இதனை விண்ணப்பதாரர்கள் www.licindia.in என்ற இணையதளத்திலேயே பதிவிறக்கம் செய்யதுக்கொள்ளலாம். மேலும் விவரங்கள் அறிய https://www.licindia.in/getattachment/Bottom-Links/Recruitment-of-Assistants-2019/Revised-Exam-dates.pdf.aspx?_ga=2.115787974.198813663.1570708793-464317252.1570079021 என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

1 comment:

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews