IIT கல்வி நிறுவனங்களில் வடிவமைப்புப் பட்டப்படிப்புகளில் சேர UCEED 2020 நுழைவுத் தேர்வு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, October 25, 2019

Comments:0

IIT கல்வி நிறுவனங்களில் வடிவமைப்புப் பட்டப்படிப்புகளில் சேர UCEED 2020 நுழைவுத் தேர்வு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (Indian Institute of Technology-IIT) கல்வி மையங்கள் இந்தியாவின் பல நகரங்களில் செயல்பட்டுவருகின்றன. அவற்றில் மும்பை, கௌஹாத்தி, ஹைதராபாத், ஜபல்பூர் ஆகிய நகரங்களிலுள்ள கல்வி மையங்களில் இளநிலை வடிவமைப்பு (Bachelor of Design - B.Des) பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன. இப்பட்டப்படிப்புகளில் சேர தேவையான அகில இந்திய பொது நுழைவுத் தேர்விற்கான (Undergraduate Common Entrance Examination for Design UCEED 2020) அறிவிப்பை, இத்தேர்வை நடத்தும் மும்பை இந்திய தொழில்நுட்பக் கழகம் (Indian Institute of Technology Mumbai) தற்போது வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்கத் தகுதி +2 அல்லது இதற்கு இணையான படிப்பில் அறிவியல், பொருளியல், கலை, மானுடவியல் என ஏதேனும் ஒரு பாடப்பிரிவை எடுத்து படித்து தேர்ச்சி பெற்றவர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். 1.10.1995 அன்று அல்லது அதற்குப்பின் பிறந்த பொதுப்பிரிவினரும், பொருளாதாரத்தில் பின்தங்கிய, பிற்படுத்தப்பட்ட மாணவர்களும், 1.10.1990 அல்லது அதற்குப்பின் பிறந்த ஆதிதிராவிட, பழங்குடி, மாற்றுத்திறனாளி மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். இத்தேர்வை அடுத்தடுத்த இருமுறை மட்டும் விண்ணப்பிக்கலாம். இதன் மதிப்பெண் ஒரு ஆண்டுக்கு மட்டுமே பயன்படும். தேர்வு மையங்கள் இத்தேர்வு அகமதாபாத், பெங்களூரு, போபால், புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, டேராடூன், டெல்லி, எர்ணாகுளம், பனாஜி, கௌஹாத்தி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், லக்னோ, கொல்கத்தா, கோழிக்கோடு, மும்பை, நாக்பூர், பாட்னா, ராய்ப்பூர், திருவனந்தபுரம், திருச்சூர், விசாகப்பட்டினம் உள்ளிட்ட 24 நகரங்களில் நடைபெறும். இதைத் தவிர துபாயிலும் இத்தேர்வு நடத்தப்படுகிறது.
தேர்வுக்கான பாடத்திட்டம் இந்த 3 மணி நேரத் தேர்வு ஆங்கிலத்தில் இருக்கும். 300 மதிப்பெண்களுக்கான இத்தேர்வில் கட்டாயமாக பதிலளிக்க வேண்டிய இரண்டு பிரிவுகள் உண்டு. பகுதி A என்பது 240 மதிப்பெண்களுக்கான 2½ மணி நேர கணினித் தேர்வாகும். இதில் மூன்று பிரிவுகள் உண்டு. பிரிவு-1 நியூமரிக்கலில் விடையளிக்க வேண்டிய பகுதி. இதில் 18 வினாக்கள் இருக்கும். ஒரு வினாவிற்கு 4 மதிப்பெண்கள் தரப்படும். தவறான விடைக்கு மதிப்பெண் குறையாது. பிரிவு-2 சரியான விடை தரும் வினாக்களைக் கொண்டது. இப்பகுதியில் 18 வினாக்கள் இருக்கும். ஒரு வினாவிற்கு 4 மதிப்பெண்கள் தரப்படும். தவறான விடைக்கு 0.19 மதி்பபெண்கள் குறையும். இப்பகுதியில் விடையில் ஒன்றுக்குமேல் சரியான விடைகள் இருக்கும். பிரிவு-3-ல் ஒரு சரியான விடையுள்ள, சரியான விடையைத் தேர்வு செய்யும்படியான வினாக்கள் இருக்கும். இதில் 32 வினாக்கள் இருக்கும். சரியான விடைக்கு 3 மதிப்பெண்கள். தவறான விடைக்கு 0.71 மதிப்பெண் குறையும். பகுதி B-ல் வரையும் திறனை அறிவதற்கான பகுதியாக வைத்துள்ளனர். இதற்கு 12 மதிப்பெண்கள் வழங்கப்படும். விண்ணப்பிக்கும் முறை இப்பட்டப்படிப்புகளில் சேர தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.uceed.iitb.ac.in என்ற இணையம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்தியக் குடிமக்களுக்கு இந்திய மையங்களுக்கு (PIU/UCI உட்பட) அனைத்துப் பிரிவு பெண்கள், ஆதிதிராவிட, பழங்குடியின, மாற்றுத்திறனாளி மாணவர்கள் ரூ.1500, பிற பிரிவினர் ரூ.3000 விண்ணப்பக் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். SAARC நாட்டு மாணவர்களுக்கு 200 யு.எஸ். டாலர்கள், SAARC அல்லாத நாட்டின் மாணவர்கள் 325 யு.எஸ்.டாலர்கள் விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். துபாயில் தேர்வு எழுத விரும்பும் இந்திய மாணவர்கள் 200 யு.எஸ்.டாலர்களும், SAARC நாட்டின் மாணவர்கள் 200 யு.எஸ்.டாலர்களும், SAARC அல்லாத நாட்டின் மாணவர்கள் 325 யு.எஸ்.டாலர்கள் செலுத்தவேண்டும்.தாமதக் கட்டணமாக ரூ.500 செலுத்தி 16.11.2019 வரை விண்ணப்பிக்கலாம். அட்மிட் கார்டுகளை 1.1.2020 முதல் பதிவிறக்கம் செய்யலாம். 5.1.2020 அன்றைக்குள் தவறுகளைச் சரிசெய்து கொள்ளலாம். தேர்வு 18.1.2020 (சனிக்கிழமை) முற்பகல் 10 மணிக்கு நடைபெறும்.தேர்வு முடிவுகள் 13.3.2020 அன்று வெளியாகும். மேலும் முழு விவரங்களுக்கு http://www.uceed.iitb.ac.in/2020/ என்ற இணையதளப் பக்கத்தைப் பார்க்கவும்.விண்ணப்பிக்க கடைசி நாள் 9.11.2019.
வடிவமைப்பு முதுநிலைப் பட்டம் படிக்க CEED 2020 பொது நுழைவுத் தேர்வு! வடிவமைப்புத் துறையில் பட்டப்படிப்புகளை முடித்தவர்கள் இந்தியத் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் (IIT) முதுநிலைப் பட்டம் படிப்பதற்குப் பொது நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். அதன்படி Indian Institute of Science (IISC)- பெங்களூரு, IIT-மும்பை, IIT-டெல்லி, IIT-கௌஹாத்தி, IIT-ஹைதராபாத், IIT-கான்பூர், IIT-ஜபல்பூர் ஆகிய இடங்களில் M.Des படிப்பிற்கும், IISC-பெங்களூரு, IIT-மும்பை, IIT-கௌஹாத்தி, IIT-ஹைதராபாத், IIT-கான்பூர் ஆகியவற்றில் Ph.D படிப்பிற்கும் பொது நுழைவுத்தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்தேர்வை IIT மும்பை நடத்துகிறது. கல்வித் தகுதி: பட்டப்படிப்பு/பட்டயம்/GD Arts டிப்ளமோ படித்தவர்களும் M.Des படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். முதுநிலைப் பட்டம் படித்தவர்கள், தற்போது இறுதி ஆண்டு படித்துக்கொண்டுள்ளவர்கள் Ph.D-க்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு முறை: தேர்வு 18.1.2020 காலை 10 மணிக்கு நடைபெறும். தேர்வில் பகுதி A, பகுதி B என்ற இரண்டு பிரிவுகள் உண்டு. இரண்டு பிரிவுகளுக்கும் மாணவர்கள் விடையளிக்க வேண்டும். பகுதி A காலை 10 மணி முதல் 11 மணி வரையிலும், பகுதி B காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும் நடைபெறும். பகுதி A கணினி வழித் தேர்வாகும். இதில் ஒன்றுக்கு மேலான விடைகள் கொடுக்கப்பட்டு, சரியான ஒரு விடை தேர்வு செய்யும்படியும், நியூமரிக்கல் விடை என்ற வினாக்கள் இருக்கும்.இவை மாணவர்களின் விஷ்வல், ஸ்பேஷியல் எபிலிட்டி, சுற்றுப்புற அறிவு, சமூக உணர்வு, அனாலிட்டிக்கல், லாஜிக்கல் ரீசனிங், மொழி, கவனித்தல், வடிவமைப்புத்திறன், எழுதும் திறன் இவற்றைச் சோதிக்கும் நுண்ணறிவு வினாக்கள் இருக்கும். பகுதி B-ல் வினாக்கள் கணினியில் காண்பிக்கப்படும். விடையைத் தாளில் எழுத வேண்டும். விடைத்தாள் தொகுப்பு தேர்வில் தரப்படும். விண்ணப்பிக்கும் முறை:விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள்www.ceed.iitb.ac.in என்ற இணையம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக பெண்கள் ரூ.1300, ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் ரூ.1300, மற்ற பிரிவினர் ரூ.2600 செலுத்த வேண்டும். தாமதக் கட்டணம் ரூ.500 செலுத்தி 16.11.2019 வரை விண்ணப்பிக்கலாம். அட்மிட் கார்டு 1.1.2020 முதல் பதிவிறக்கம் செய்ய இயலும். மேலும் முழு விவரங்களையும் www.ceed.iitb.ac.in என்ற இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 9.11.2019
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews