தீபாவளிக்கு இன்னும் ஒரு நாள் தான் இருக்கு... இப்பவாவது பசுமை பட்டாசுன்னா என்னன்னு தெரிஞ்சுக்கிட்டீங்களா இல்லையா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, October 25, 2019

Comments:0

தீபாவளிக்கு இன்னும் ஒரு நாள் தான் இருக்கு... இப்பவாவது பசுமை பட்டாசுன்னா என்னன்னு தெரிஞ்சுக்கிட்டீங்களா இல்லையா?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பண்டிகைகள் மற்றும் விழாக்காலங்களில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமைப் பட்டாசுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதாவது பசுமை பட்டாசுகள் என்பவை அனுமதிக்கப்பட்ட அளவில் மட்டுமே கந்தகம், பேரியம் மற்றும் அலுமினியம் உள்ளிட்ட வேதிப்பொருட்களைக் கொண்டு தயாராகும் ஒருவகை பட்டாசுகள். இவற்றால் சூழல் சீர்கேடுகள், காற்று மாசுபாடுகள் குறையும் எனக் கருதியது உச்சநீதிமன்றம்.
பசுமை பட்டாசு என்பது தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் ‘நீரி’ யின் (NEERI) கண்டுபிடிப்பு. இது, அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) கீழ் வரும் அரசு நிறுவனம். பார்ப்பதற்கு வழக்கமான பட்டாசு போலவே இருக்கும்.
பசுமை பட்டாசுகளும், சாதாரண பட்டாசுகளைப் போலவே தான் இருக்கும். ஆனால். இவற்றுக்கும், சாதாரண பட்டாசுகளுக்கும் இடையில் இருக்கும் வேறுபாடு என்னவென்றால்? இவை வெடிக்கும் போது சத்தம் குறைவாக இருப்பதோடு வெளியிடும் மாசு அளவும் கூட குறைவாகவே இருக்கும். சாதாரண பட்டாசுகளுடன் ஒப்பிடும் போது பசுமை பட்டாசுகள், 40% முதல் 50% வரை குறைவான நச்சு வாயுவையே வெளியிடக்கூடிய தன்மை கொண்டதாக இருக்கிறது. இந்தப் புதிய ரக பட்டாசுகளை வெடித்தாலும் நைட்ரஜன் மற்றும் கந்தக வாயுக்கள் வெளியேறும் தான் என்றாலும் இவற்றில் என்ன சிறப்பு என்றால். இதில் பயன்படுத்தப்படும் மூலப் பொருட்கள் வழக்கமான பட்டாசுகளில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களில் இருந்து மாறுபட்டவை. எப்படியெனில்? நீரி தயாரித்திருக்கும் சூத்திரத்தின் படி உருவாக்கப்படும் பசுமை பட்டாசுகள், வெடித்த பிறகு நீராக மாறும் என்பதோடு, தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் அதிலேயே கரைந்து விடும் என்பதும் இதில் சற்று ஆறுதலான விஷயம்.
பசுமை பட்டாசுகளில் எத்தனை வகைகள் உள்ளன?
வாட்டர் ரிலீசர் வகை பட்டாசுகள்
STAR பசுமை பட்டாசுகள்
SAFAL பசுமை பட்டாசுகள்
அரோமா பட்டாசுகள்
- என நான்கு வகைகள் தற்போது சந்தையில் விற்பனைக்கு கிடைக்கின்றன.
தண்ணீரை உருவாக்கும் பட்டாசுகள்...
இந்தவகை பட்டாசுகள் வெடித்த பிறகு கரியாக மாறாமல் நீர்த்துளிகளாக உருமாறி விடும். அதில் சல்ஃபர் மற்றும் நைட்ரஜன் வாயுக்கள் கரைந்து விடும். இந்த வகை பட்டாசுகளுக்கு ‘வாட்டர் ரிலீசர்’ என்று ‘நீரி’ பெயரிட்டுள்ளது.
கந்தக மற்றும் நைட்ரஜன் வாயுக்களை குறைவாக வெளியிடுகிறவை:
இந்த வகை பசுமை பட்டாசுகளுக்கு STAR பசுமை பட்டாசு என ‘நீரி’ பெயரிட்டுள்ளது. அதாவது safe thermite cracker என்பதன் சுருக்கமாக STAR என்று பெயர் வழங்கப்பட்டுள்ளது. இந்த வகை பட்டாசில், ஆக்சிஜனேற்றம் செய்யும் திறன் கொண்ட பொருட்கள் (Oxidising Agent) பயன்படுத்தப் படுகிறது.
அலுமினியம் குறைவாக பயன்படுத்தப் படுகிறவை!
சாதாரண பட்டாசுகளுடன் ஒப்பிடும் போது இந்த வகை பட்டாசில் 50 முதல் 60 சதவிகிதத்திற்கும் குறைவான அலுமினியம் பயன்படுத்தப்படுகிறது. எனவே இதற்கு SAFAL (Safe Minimal Aluminium) என்று பெயரிடப்பட்டுள்ளது.
அரோமா பட்டாசு:
இந்த வகை பட்டாசுகளை வெடிக்கும் போது தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் குறைவாக வெளியாவதோடு, நறுமணமும் வெளியாகும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews