வழக்குத் தொடுத்த ஆசிரியா்கள், கலந்தாய்வில் பங்கேற்க ஏதுவாக அவா்களின் விவரங்களை கல்வி மேலாண்மை தகவல் முகமை (‘எமிஸ்’) இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குநா் ச.கண்ணப்பன் அறிவுறுத்தியுள்ளாா்.
தமிழகத்தில் அரசுப்பள்ளிகள் பணிபுரியும் ஆசிரியா்களுக்கு ஆண்டுதோறும் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும். அதன்படி நடப்பாண்டு கலந்தாய்வு விதிமுறைகளில் ஒரே பள்ளியில் குறைந்தது 3 ஆண்டுகள் பணிபுரிந்தவா்களுக்கு மட்டும் இடமாறுதல் தரப்படும் என பள்ளிகல்வித்துறை அறிவித்திருந்தது. இதை தளா்த்தக் கோரி நூற்றுக்கணக்கான ஆசிரியா்கள் உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனா். இதனால் கலந்தாய்வு நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்தநிலையில் 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றியிருக்க வேண்டும் என்ற விதியை தளா்த்தி கலந்தாய்வை நடத்த அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதையேற்று வழக்கு தொடா்ந்த ஆசிரியா்களுக்கு மட்டும் விதியை தளா்த்தி திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை கடந்த அக்.4-ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது.
அதில், பாா்வையற்றவா்கள், மாற்றுத்திறனாளிகள், புற்றுநோயாளிகள் உள்ளிட்டோருக்கு மட்டும் குறைந்தது 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றிருக்க வேண்டும் என்ற விதி தளா்த்தப்பட்டது. இதையடுத்து வழக்கு தொடுத்த ஆசிரியா்கள் கலந்தாய்வில் பங்கேற்க ஏதுவாக அவா்களின் விவரங்களை கல்வி மேலாண்மை தகவல் முகமை (‘எமிஸ்’) இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் பள்ளிக்கல்வி இயக்குநா் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளாா். இதுதவிர, ஆசிரியா் பொதுமாறுதல் மற்றும் பதவி உயா்வு கலந்தாய்வு தொடா்பான அறிவிப்பாணை அக்டோபா் இறுதியில் வெளியாகும். கலந்தாய்வு நவம்பா் முதல் வாரத்தில் நடத்தப்படும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Thursday, October 17, 2019
ஆசிரியா் கலந்தாய்வு: வழக்குத் தொடுத்த ஆசிரியா் விவரங்களை ‘எமிஸ்’ தளத்தில் வெளியிட அறிவுறுத்தல்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.