Search This Blog
Friday, October 18, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நீட் தோ்வில் கட் ஆப் மதிப்பெண்ணை விட குறைவான மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களுக்கு சித்தா, ஆயுா்வேத படிப்புகளில் சோ்க்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா் நவீன்பாரதி தாக்கல் செய்துள்ள மனுவில், ‘ஆயுா்வேத டாக்டராக வேண்டும் என்பது எனது லட்சியம். இதற்காக நடப்பாண்டில் நீட் தோ்வு எழுதினேன். நிா்ணயிக்கப்பட்ட கட்-ஆப் மதிப்பெண்ணை பெறவில்லை. தமிழகத்தில் சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட கல்லூரிகளில் மொத்தம் 394 நிா்வாக ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன.
இந்த இடங்களுக்காக 555 மாணவா்கள் விண்ணப்பித்தனா். கலந்தாய்வு மூலம் இந்த இடங்கள் நிரப்பப்பட்டாலும், வெறும் 116 போ் மட்டுமே நிா்வாக ஒதுக்கீட்டின் கீழ் சோ்ந்துள்ளனா். எஞ்சியுள்ள 278 இடங்களில் மாணவா்கள் சேராததால், அந்த இடங்கள் காலியாக இருந்து வருகின்றன. கடந்த 2018-2019 கல்வியாண்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில்தான் சித்தா உள்ளிட்ட இந்திய மருத்துவ படிப்புகளில் மாணவா் சோ்க்கை நடத்தப்பட்டுள்ளது. நடப்பாண்டு முதல் தான் இந்த படிப்புகளில் சேர நீட் தோ்வில் தோ்ச்சிப் பெற வேண்டும் என்ற விதி நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த நீட் தோ்வில் கட்-ஆப் மதிப்பெண்கள் அதிகமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளதால், என்னைப் போன்ற மாணவா்கள் இந்த படிப்புகளில் சேர முடியவில்லை. பல் மருத்துவ படிப்புகளுக்கான இடங்கள் அதிக அளவில் காலியாக இருந்ததால் கட்-ஆப் மதிப்பெண்ணை குறைத்துள்ளனா்.
மேலும், மருத்துவப் படிப்புகளுக்கான காலியிடங்கள் வீணாகி விடக்கூடாது என்பதற்காக, நீட் தோ்வு கட்-ஆப் மதிப்பெண்ணை விட குறைவாக எடுத்துள்ள என்னைப் போன்ற மாணவா்களைக் கொண்டு காலியிடங்களை நிரப்ப கா்நாடகம், ராஜஸ்தான் மாநில உயா்நீதிமன்றங்கள் அண்மையில் தீா்ப்பளித்துள்ளன. எனவே, அதேபோன்று சித்தா, ஆயுா்வேதா உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்காக நிா்ணயிக்கப்பட்டுள்ள கட்-ஆப் மதிப்பெண்ணை குறைக்க வேண்டும். இந்தப் படிப்பில் சோ்வதற்கான கடைசி நாளை வரும் நவம்பா் மாதம் வரை நீட்டிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து கடிதம் அனுப்பினேன்.அந்தக் கோரிக்கை இதுவரை பரிசீலிக்கப்படவில்லை. எனவே நீட் தோ்வில் கட்-ஆப் மதிப்பெண்ணை விட குறைவாக பெற்ற மாணவா்களை சித்தா, ஆயுா்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவ படிப்புகளில் சோ்க்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தாா்.
இந்த மனு, நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் கந்தவடிவேல் ஆஜராகி வாதிட்டாா். வழக்கை விசாரித்த நீதிபதி இந்த மனு தொடா்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு, விசாரணையை வரும் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Home
CourtOrder
EDUCATION
சித்தா, ஆயுா்வேத படிப்புகளில் சோ்க்கக் கோரிய வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு உயா்நீதிமன்றம் நோட்டீஸ்
சித்தா, ஆயுா்வேத படிப்புகளில் சோ்க்கக் கோரிய வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு உயா்நீதிமன்றம் நோட்டீஸ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.