👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'அரசு கல்லுாரி பேராசிரியர் பணிக்கு, பணி அனுபவ சான்றிதழ் பெற, வரும், 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்' என, கல்லுாரி கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள், பி.எட்., கல்லுாரிகளில், காலியாக உள்ள, 2,331 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், பணி நியமன நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான விண்ணப்ப பதிவு, அக்., 4ல் துவங்கியது. வரும், 30ம் தேதிக்குள் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த நியமன நடவடிக்கையில், முதலில் சான்றிதழ் சரிபார்ப்பும், பின் நேர்முக தேர்வும் நடத்தப்பட உள்ளது. விண்ணப்பதாரர்களுக்கு கல்வி தகுதி மற்றும் பணி அனுபவத்துக்கு, மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன.
எனவே, பணி அனுபவ சான்றிதழை, கல்லுாரி கல்வி இணை இயக்குனர் அலுவலகங்களிலும், கல்லுாரிகளிலும் பெற்று சமர்ப்பிக்க, பட்டதாரிகளுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. எனவே, பணி அனுபவ சான்றிதழ் பெறுபவர்கள், தாங்கள் பணியாற்றிய கல்லுாரிகளின் முதல்வர்களை அணுகி, சான்றிதழ் பெற வேண்டும். கல்லுாரி கல்வி இணை இயக்குனரிடம் பெற, வரும், 28ம் தேதிக்குள் விண்ணப்பித்து, சான்றிதழை பெற்றுக் கொள்ள வேண்டும் என, பட்டதாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.