👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
''சீனாவுடன், கல்விக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை, தமிழக அரசு விரைவில் மேற்கொள்ளும்,'' என, தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் பேசினார்.
சீன வானொலியின், தமிழ் ஒலிபரப்பு பிரிவு சார்பில், சென்னையில், தமிழ் நேயர்கள் உடனான சந்திப்பு நிகழ்ச்சி, 'சீன - இந்தியா சந்திப்பு' என்ற தலைப்பில், நேற்று நடந்தது.இதில், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் பங்கேற்று, தமிழ் சொற்பிறப்பியல் அகராதி மற்றும் கீழடி ஆகிய நுால்களை, சீன ஊடக பிரிவினருக்கு வழங்கி, பேசியதாவது:சீன வானொலியின், தமிழ் ஒலிபரப்பு பிரிவில் இருந்து, புதிய நிகழ்ச்சிகள் ஒலிப்பரப்பாகின்றன. நம்மை விட, சீன தமிழ் அறிவிப்பாளர்கள், மிகவும் தெளிவாக தமிழ் பேசுகின்றனர்.இந்திய, சீன உறவு, பல நுாற்றாண்டுகளாக இருந்த நிலையில், சுதந்திரத்திற்கு பின், தொய்வு ஏற்பட்டது. இரு நாட்டு தலைவர்கள் உடனான சந்திப்பிக்கு பின், இரு நாடுகளுக்கு இடையே உள்ள, இரும்புத்திரை விலகும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுஉள்ளது.
வானொலி வழியாக, தமிழகத்தில், 500க்கும் மேற்பட்ட நேயர்கள், சீன வானொலிக்காக கூடுவது, ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் சீன பட்டாசு, தீப்பெட்டி உள்ளிட்ட பல்வேறு பொருட்களால், நமக்கு பாதிப்பு இருந்தாலும், விரைவில் தீர்வு ஏற்படும். அதேபோல, தமிழ் வளர்ச்சி துறை சார்பாக, தமிழ் மாணவர்கள், சீன சென்று கல்வி கற்கவும், அங்கிருந்து தமிழகத்தில் கல்வி கற்கவும், இருநாட்டு உடனான புரிந்துணர்வு ஒப்பந்தம், விரைவில் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.