Search This Blog
Saturday, October 05, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சவுதி அரேபியா குடியுரிமை பெற்றுள்ள உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு ரோபோட் சோஃபியா, பருவநிலை மாறுபாடு, மின்சார சிக்கனம், பிளாஸ்டிக் ஒழிப்பு உள்ளிட்டவை குறித்து அசத்தலான பேச்சை வெளிப்படுத்தியுள்ளது.
ஹாங்காங்கைச் சேர்ந்த ஹான்சன் ரொபாட்டிக்ஸ் நிறுவனத்தால் கடந்த 2016-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஹியூமனாய்ட் எனப்படும் மனித உருவம் கொண்ட உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு ரோபோட்தான் சோபியா.
இயல்பான மனிதர்களைப் போன்றே செயல்பட்டு, பேசவும், உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள சோபியாவுக்கு கடந்த 2017ம் ஆண்டு சவூதி அரேபியா அரசு குடிமகள் அந்தஸ்து வழங்கியது.
கண்களில் இருக்கும் காமிராவும், மார்புப் பகுதியில் இருக்கும் சென்சாரும் சோபியாவின் பார்வைக்கு உதவுகின்றன. சோபியாவுக்குள் பொருத்தப்பட்டிருக்கும் செயலி மூளையைப் போல செயலாற்றி கட்டுப்படுத்துகிறது. சோபியா ரோபோட்டுக்கு கோபம், வருத்தம் உள்ளிட்ட 50 வகையான முகபாவங்களை காட்டும் திறன் உண்டு.
இந்நிலையில், மத்தியப்பிரதேசத்தின் இந்தூரில் 55 நாடுகளைச் சேர்ந்த பள்ளிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற சர்வதேச ரவுண்ட் ஸ்கொயர் மாநாட்டில் ரோபோட் சோபியா உரையாற்றியது. பருவநிலை மாறுபாடு, மின்சார சிக்கனம், பிளாஸ்டிக் ஒழிப்பு உள்ளிட்டவை குறித்த சோபியாவின் பேச்சு, மாநாட்டில் பங்கேற்ற பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Home
EDUCATION
TECHNOLOGY
உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு பெண் ரோபோட் சோபியா: சர்வதேச பள்ளிகள் மாநாட்டில் பங்கேற்பு - உலக பிரச்னைகள் குறித்து அசத்தல் பேச்சு
உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு பெண் ரோபோட் சோபியா: சர்வதேச பள்ளிகள் மாநாட்டில் பங்கேற்பு - உலக பிரச்னைகள் குறித்து அசத்தல் பேச்சு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.