Breaking

Tuesday, October 01, 2019

செமஸ்டர் தேர்வு கட்டணத்தேதி நீட்டிக்க வேண்டும்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'மதுரை காமராஜ் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளில் நவ., 2019 செமஸ்டர் தேர்வுகள் கட்டணம் அக்.,20 வரை செலுத்தும் வகையில் தேதி நீட்டிப்பு செய்ய வேண்டும்' என கல்லுாரி நிர்வாகிகள் வலியுறுத்தினர். மதுரை காமராஜ் பல்கலை தனியார் கல்லுாரி நிர்வாகிகள் சங்க ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் தலைவர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி தலைமையில் நடந்தது. செயலாளர் ராஜகோபால் முன்னிலை வகித்தார்.இக்கூட்டத்தில் கல்லுாரி நிர்வாகிகள் கூறியதாவது: அனைத்து கல்லுாரிகளிலும் நவ.,2019 செமஸ்டர் தேர்வுகள் இளங்கலைக்கு நவ.,1, முதுகலைக்கு நவ.,9ம் தேதி முதல் துவங்குகின்றன. இதற்கான தேர்வு கட்டணம் அபதாரமின்றி முறையே அக்.,9 மற்றும் அக்.,16 என கடைசி தேதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.கல்லுாரிகளில் இதுவரை பெரும்பாலான மாணவர்கள் கட்டணம் செலுத்தவில்லை. பல்கலை குறிப்பிட்ட கடைசி தேதிக்குள் தேர்வு கட்டணம் வசூலிப்பது இயலாத காரியம். எனவே தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதியை அக்.,20 வரை நீட்டித்து தேர்வாணையர் ரவி நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்தனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog