👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இரண்டு மாணவ - மாணவியர், அமெரிக்காவின், 'நாசா' விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு, கல்வி சுற்றுலா அனுப்பப்பட்டனர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து, நேற்றிரவு அவர்கள் உற்சாகமாக புறப்பட்டனர்.நம் நாளிதழின் மாணவர் பதிப்பான, 'பட்டம்' சார்பில், 2018, செப்டம்பரில், வினாடி - வினா போட்டி அறிவிக்கப்பட்டது. அக்., முதல் டிச., வரை, ஐந்து முறை, வினாடி - வினா போட்டிகள் நடந்தன.முதல் சுற்றில், பள்ளி மாணவ - மாணவியர், 25 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அவர்களில், 106 பள்ளிகளைச் சேர்ந்த, 212 பேர், அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனர். இந்த சுற்றில், வெற்றி பெற்ற எட்டு குழுக்கள், இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.இறுதி போட்டி, சென்னை, அண்ணா நுாற்றாண்டு நுாலக அரங்கில், பிப்ரவரியில் நடந்தது.
இந்த போட்டியில், தற்காலிக நிகழ்வுகள், அறிவியல், தொழில்நுட்பம், கணிதம் உள்ளிட்டவை குறித்து, கேள்விகள் கேட்கப்பட்டன.அதில், சென்னை, மாம்பாக்கம் அடுத்த பொலச்சேரி, மகரிஷி வித்யாமந்திர் சீனியர் செகண்டரி பள்ளியின், ஆர்.ஹரிஷ், என்.லக் ஷ்னா ஆகியோர், முதலிடம் பிடித்து, வெற்றி பெற்றனர்.அவர்கள் இரண்டு பேருக்கும், அமெரிக்காவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையமான, நாசாவுக்கு சென்று சுற்றி பார்க்க, நம் நாளிதழ், அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. 'கோ 4 குரு' நிறுவனம், நம் நாளிதழுடன் இணைந்து, இதற்கு ஏற்பாடு செய்துள்ளது.
மாணவர் ஹரிஷ், மாணவி லக் ஷனா ஆகியோர், நேற்றிரவு, அமெரிக்காவுக்கு, உற்சாகத்துடன் புறப்பட்டுச் சென்றனர். அவர்களை, விமான நிலையத்தில் இருந்து, 'தினமலர் - பட்டம்' பொறுப்பாசிரியர், வெங்கடேஷ், தினமலர் விளம்பர பிரிவு துணை பொது மேலாளர் சேகர், துணை மேலாளர்கள், ஜெயகுமார், பிரகாஷ் ஆகியோர், பூங்கொத்து கொடுத்து,
வாழ்த்தி, வழியனுப்பினர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.