நடிகர்களின் ரசிகர்களே; மரண போர்வெல்களை மூடுங்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, October 29, 2019

Comments:0

நடிகர்களின் ரசிகர்களே; மரண போர்வெல்களை மூடுங்கள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
வாசகர்களே! மணப்பாறை நடுப்பட்டி குழந்தை அஜித்தின் அகாலமரணம் மனிதநேயம் உள்ள அனைவரையும் ஆழ்ந்த சோகத்தில் தள்ளியுள்ளது. தண்ணீருக்காக போடப்பட்ட போர்வெல் கண்ணீரை வரவழைக்கும் எமனாக மாறியுள்ளது. இதில் ஒரு பொறுப்புள்ள குடிமகனாக நாம் என்ன செய்யப் போகிறோம்? என்ன பாடம் கற்றுக் கொள்ள போகிறோம்?
அரசியல் கட்சிகளே, இளைஞர் அமைப்புகளே, பொதுநல இயக்கங்களே, ரசிகர் நற்பணி மன்றங்களே, நுகர்வோர் அமைப்புகளே, மனித உரிமை ஆர்வலர்களே, சுற்றுச்சூழல் ஆர்வலர்களே உங்கள் பகுதியில் பயன்பாட்டில் இல்லாத மூடப்படாத அபாயகரமான ஆழ்துளை கிணறுகள் குறித்த விபரங்களை உடனடியாக உங்கள் பகுதி ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம், போலீஸ், தீயணைப்பு அதிகாரிகளிடம் தெரிவித்து உயிரிழப்பை தவிர்க்க உதவிடுங்கள், சிறுவன் அஜித்திற்கு ஏற்பட்ட நிலைமை இனிமேல் இன்னொரு குழந்தைக்கு ஏற்படக்கூடாது. இப்படி ஒரு சம்பவம் இதுவே கடைசியாக இருக்கட்டும் என்று சபதம் எடுப்போம். உங்கள் பகுதியில் மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் இருந்தால் உடனடியாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு புகார் செய்யுங்கள்.

உங்கள் மாவட்ட கலெக்டர் அலுவலக எண்கள் இதோ:
தொலைபேசி எண்கள்:
கோவை மாவட்டம் டோல் ப்ரீ எண் - 1800 - 599 - 6000
நீலகிரி :
ஊட்டி மாவட்ட வருவாய் அலுவலர் - 9445000912
டோல்ப்ரீ எண்- 1077.

திருப்பூர்
கலெக்டர் அலுவலக எண்: 0421 2971199, 2971133
திருப்பூர் மாவட்ட வாட்ஸ் ஆப் எண்: 97000 41114
திருப்பூர் மாவட்ட டோல் ப்ரீ எண்: 1077
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews