போனஸ் வந்ததற்கும் சுவாரஸ்யமான வரலாறு இருக்கு மக்களே! அதையும் தெரிஞ்சிக்கோங்க!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, October 23, 2019

Comments:0

போனஸ் வந்ததற்கும் சுவாரஸ்யமான வரலாறு இருக்கு மக்களே! அதையும் தெரிஞ்சிக்கோங்க!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பண்டிகைக் காலம் நெருங்கி விட்டது. பெரும்பாலான நிறுவனங்களில் தீபாவளி போனஸ் வழங்கப்பட்டு வருகின்றன. சரி.. இந்த போனஸ் வழங்கும் முறை எப்படி வந்தது.?
போனஸ் என்றால் என்ன?
போனஸ் என்பது நிர்வாகத்தால் ஒரு குறிப்பிட்ட பணியாளருக்கோ அல்லது ஒரு பணியாளர் குழுவிற்கோ அவர்களின் முந்தைய பணிநாட்களில் சிறப்பாகப் பணிபுரிந்து நிர்வாகத்திற்கும், நிறுவனத்திற்கும் லாபம் சேர்த்துக் கொடுத்ததானாலோ அல்லது நிறுவனத்திற்கு வெற்றி தேடித்தந்து ஒரு குறிப்பிட்ட இலக்கினை அடைந்ததற்காகவோ அவர்களின் பணியைப் பாராட்டி நிர்வாகத்தால் அறிவிக்கப்படும் ஒரு பரிசுத் தொகை என்று கூறலாம்.
போனஸ் வரலாறு
இந்தியாவில் பிரிட்டிஷாரின் ஆதிக்கத்திற்கு முன்பு வாரச் சம்பள முறையே நடைமுறையில் இருந்து வந்துள்ளது. ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில்தான் மாத சம்பள முறை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. அதாவது 4 வாரங்களுக்கு ஒரு முறை சம்பளம் கணக்கிட்டு ஒவ்வொரு மாதமும் கொடுக்கப்பட்டது.
அவ்வாறு மாதத்திற்கு ஒரு சம்பளம் என்றால் வருடத்திற்கு 12 சம்பளம் வருகிறது. ஆனால் ஒரு வருடத்திற்கு 52 வாரங்கள் வருகிறது. அப்படியென்றால் 13 மாத சம்பளங்கள் வர வேண்டுமல்லாவா? இதனால் தொழிலாளர்கள் ஏமாற்றப்படுவதாக 1930-ம் ஆண்டு வாக்கில் மகாராஷ்ட்ராவில் உள்ள சில தொழிற்சங்கங்கள் போராட்டத்தை தொடங்கின. தங்களுக்கு ஒரு மாத சம்பளம் தராமல் வஞ்சிக்கப்படுவதாக தொழிற்சங்கங்கள் தொடர்ந்து போராடின. 10 ஆண்டு காலம் இந்த போராட்டம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து ஒரு மாத சம்பளத்தை வழங்குவது குறித்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பிரிட்டிஷ் அரசு ஆலோசனை நடத்தியது. இந்தியாவில் பெரும்பான்மையான மக்களால் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையின் போது மக்களுக்கு அதிக பணத் தேவை இருக்கும் என்றும், அந்த சமயத்தில் போனஸ் வழங்கப்பட்டால் பொருத்தமாக இருக்கும் என்று தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து 1940-ம் வருடன் ஜுன் மாதம் 30-ம் தேதி இந்தியாவில் முதன் முதலாக இந்தியாவில் போனஸ் வழங்கப்பட்டது. இதுதான் முதல் போனஸ்.
அப்போது தான் தீபாவளி / தசரா பண்டிகை பிரசித்தி பெற்ற பண்டிகையாதலால் அதனையொட்டி கொடுத்தால் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய அது வசதியாக இருக்கும் என கோரிக்கை வைத்ததின் விளைவாக போனஸ் என்ற பெயரில் வழங்கப்பட்டது...!! பின்நாட்களில் அது லாப விகிதத்தை கணக்கிட்டு விஸ்தரிக்கப்பட்டது.
போனஸ் பற்றி தெரிந்துகொண்டோம்.. இன்சென்டிவ் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டாமா?
இன்சென்டிவ் என்றால் என்ன?
இன்சென்டிவ் என்பது பணியாளர்களை ஒரு வேலையைச் செய்ய ஊக்கப்படுத்த அல்லது ஒரு இலக்கினை அடைய ஊக்கப்படுத்த நிர்வாகத்தால் ஏற்கனவே திட்டமிடப்பட்டு அடுத்தடுத்த ஒவ்வொரு பணிக்கும் ஒவ்வொரு விதமான ஊக்கத்தொகை வழங்குவதாகும்.
போனஸ் தொகைக்கும் இன்சென்டிவ் தொகைக்கும் உள்ள அடிப்படை வித்தியாம் என்ன?
போனஸ் என்பது ஒரு பணியாளர் குறிப்பிட்ட பணி அல்லது திட்டத்தை முடித்த பிறகு வழங்கப்படுவது. இன்சென்டிவ் என்பது ஒருவரை ஒரு பணியைச் செய்ய ஊக்கப்படுத்த முன்கூடியே வழங்கி அந்த வேலையே செய்யத் தூண்டுவது.
போனஸ் ஒரு இன்ப அதிர்ச்சி
போனஸ் வழக்கமாக ஒரு இன்ப அதிர்ச்சியைக் கொடுக்கக் கூடியது. இன்செண்டிவ்வில் இத்தகைய ஆச்சரியப்படும் விஷயம் ஏதும் கிடையாது. இன்சென்டிவ்கள் பணியாளர்களை ஒரு வேலையைச் செய்யத் தூண்டி நிர்வாகத்திற்கு உண்மையாக இருந்திட வழங்கப்படுவது. இன்சென்டிவ் ஒரு பணியை முடிக்கும் பணியாளருக்கு உறுதி செய்யப்பட்டது. போனஸ் என்பது ஏற்கனவே முடிக்கப்பட்ட பணிக்கு அதை முடித்த பணியாளர் குழுவிற்கு நிர்வாகம் பெற்ற பயனிலிருந்து வழங்கப்படும் ஒரு பரிசுத் தொகை.
முன்னோக்கிய பார்வை மற்றும் பின்னோக்கிய பார்வை
இன்சென்டிவ், பணியாளருக்கு வழங்கப்படும் கூடுதல் ஊதியம்.(அவர்களின் சம்பளத்திற்கு மேல் வழங்கக் கூடியது.) செய்யவேண்டிய வேலைக்காக வழங்கப்படுவதால் இது முன்னோக்கிய பார்வையாகும். ஆனால் போனஸ் என்பது ஏற்கனவே முடிக்கப்பட்ட பணியைப் பாராட்டி ரொக்கமாக வழங்கப்படும் பரிசுத் தொகை என்பதால் இது பின்னோக்கிய பார்வையாகும்.
போனஸ் ரொக்க வடிவில்
இன்சென்டிவ் முடிக்கப்பட்ட செயலுக்கு ரொக்கமாகவோ, சேமிப்பு முதலீடுகளாகவோ, பொருளாகவோ அல்லது ஒரு பயணத் திட்டமாகவோ எப்படி வேண்டுமானாலும் கொடுக்கப்படலாம். போனஸ் என்பது முடிக்கப்பட்ட பனியின் அல்லது பொருளின் மதிப்பு, நிர்வாகத்திற்குக் கிடைத்த லாபம் ஆகியவற்றின் அடிப்படையில் ரொக்கமாக மட்டுமே வழங்கப்படுவது
இன்சென்டிவ் போனஸ் வடிவில்
இன்சென்டிவ் போனசாக இருக்கலாம். ஆனால் போனஸ் இன்செண்டிவாக இருக்க முடியாது. ஏனென்றால் இன்சென்டிவ் முன்நோக்கிய பார்வையுடன் ஒரு பணியைச் செவ்வனே முடிக்கப் பணியாளரை ஊக்கப்படுத்த வழங்கப்படும், போனஸ் ஒரு பணி முடிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்ட பின்னர் முதலாளி அல்லது மேலாளர் பணியாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டிருப்பதாக நினைத்தால் தரப்படும்.
இனி உங்கள் நிறுவனத்தின் அலுவலகக் கடித தொடர்புகளில், தகவல் பரிமாற்றங்களில் போனஸ் மற்றும் இன்சென்டிவ் குறித்துச் சரியான இடங்களில் இவ்வார்த்தைகளைப் பயன்படுத்துவீர்கள்தானே?
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews