Breaking

Saturday, October 05, 2019

நீட் ஆள்மாறாட்டத்தில் 2 மாணவர்கள் 2 இடங்களில் தேர்வெழுதிய அதிசயம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நீட் ஆள் மாறாட்ட விவகாரம் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக புதிது புதிதாக பூதங்களைக் கிளப்பிக் கொண்டே இருக்கிறது. உதித் சூர்யா என்ற ஒரே ஒரு மாணவர் ஆள்மாறாட்டம் செய்ததாக எழுந்த விவகாரம் இன்று எண்ணற்ற மருத்துவ மாணவர்களை சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் தள்ளியிருக்கிறது. அதோடு, ஒரு மாணவரின் தந்தை மருத்துவரே இல்லை, போலி மருத்துவர் என்று மற்றொரு பூதம் கிளம்பி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆள் மாறாட்டம் செய்வது என்பது, அந்த மாணவருக்கு பதிலாக மற்றொரு மாணவர் தேர்வெழுதியது என்றுதான் நேற்று வரை நினைத்திருந்தோம். ஆனால், இன்றோ, ஒரே மாணவர் பெயரில் இரண்டு விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டு, ஒரு இடத்தில் அதே மாணவரும், மற்றொரு இடத்தில் அவருக்கு பதில் டூப் போட்டு வேறொருவர் தேர்வெழுதிய விவகாரம் மேலும் திகிலூட்டுகிறது. இதுவரை சிபிசிஐடி நடத்திய விசாரணையில், இரண்டு மாணவர்கள் இரண்டு விண்ணப்பங்களை சமர்ப்பித்திருப்பது தெரிய வந்துள்ளது. நாளை வேறு என்ன முறைகேடுகள் தெரியவருமோ..? அதாவது சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த பிரவீண் 2019 நீட் தேர்வை ஆவடி தேர்வு மையத்தில் எழுதியுள்ளார். அவர் பெயரில் அளிக்கப்பட்ட மற்றொரு விண்ணப்பத்தில் ஆள்மாறாட்டம் செய்து, மற்றொரு நபர் தில்லியில் தேர்வெழுதியுள்ளார். 720 மதிப்பெண்களுக்கு பிரவீண் 130 மதிப்பெண்கள் பெற்று தோல்வியடைய, தில்லியில் தேர்வெழுதிய போலியான நபர் 348 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி அடைந்தார்.
அதேப்போல, ராகுல் டேவிஸ், கோவையில் தேர்வெழுதி 125 மதிப்பெண்கள் எடுத்து நீட்டில் கோட்டைவிட, அவருக்கு பதிலாக டூப்பாக செயல்பட்டு லக்னௌவில் தேர்வெழுதிய நபர் 306 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சியடைகிறார். இதில் மற்றொரு விஷயம் என்னவென்றால், இருமாணவர்களும் வெவ்வேறு பிரிவுகளில் அதாவது ஓபிசி பிரிவு மற்றும் இதர பிரிவில் விண்ணப்பித்திருக்கிறார்கள். பிரவீண் காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியிலும், ராகுல் குரோம்பேட்டையில் உள்ள ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரியிலும் சேர்க்கை பெற்றனர். இந்த நிலையில், கடந்த வாரம் இரு மாணவர்களும், அவர்களது தந்தையுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதில் விஷயம் என்னவென்றால், முறைகேடு செய்து மாட்டிக் கொண்ட 4 மாணவர்களும் ஒவ்வொரு வகையில் மோசடி செய்து மருத்துவப் படிப்பில் சேர்க்கை பெற்றுள்ளனர். மருத்துவப் படிப்பு ஒன்றுதான், ஆனால் முறைகேடுகள் பலவிதம். நீட் ஆள்மாறாட்ட முறைகேடு விஷயம் வெளி உலகத்துக்குத் தெரிய வந்த பிறகு இப்படி புதுப்புது முறைகேடுகள் வந்து கொண்டே இருப்பதால், இந்த ஆண்டு மருத்துவம் பயில நினைத்து நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் எல்லாருமே மிகப்பெரிய மன அதிருப்தியில் இருப்பார்கள் என்பதை மட்டும் உணர முடிகிறது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog